பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 15.

பிறகு உள்ள 6-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: கருமை நிறத்தைப் பெற்ற அடிகளைக்கொண்ட வாழை, மரங்களில் காய்த்திருக்கும் பெரியவையாக விளங்கும் காய்கள் நிறைந்த குலைகள் ஆண்யானைகளினுடைய துதிக் கைகளினுடைய முன் இடங்களைத் தோற்றுமாறு செய் யவும், அந்தத் திருவாய்மூரின் பக்கங்களில் வளர்ந்து நிற்கும் சம்பா நெற்பயிர்களினுடைய கதிர்கள் வலிமையைப் பெற்ற குதிரை களினுடைய முகங்களைப் போன்ற தோற்றத்தைக் கொண்டு விளங்கவும், பெரியவை ஆக விளங்கும் வண்டிகள் இரதங்களைப் போலக் காட்சி அளிக்கவும் வயல்களில் வேலைகளைப் புரியும் தொழிலாளர்களாகிய உழவர்க ளுடைய ஆரவார ஒலி விளக்கமாகக் கேட்கவும், இவ்வாறு நெருங்கியுள்ள தேர், யானை, குதிரை, காலாட்கள் என்ற போருக்கு உரிய நான்கு வகையான அங்கங்களினுடைய வலிமையை வளம் நிரம்பியுள்ள திருவாய்மூரில் இருக்கும் மருதநிலங்கள் ஒத்துவிளங்குவன ஆகும்.’ பா ட ல் வருமாறு: -

கருங்கதலிப் பெரும்குலைகள்

களிற்றுக்கைம் முகம்காட்ட மருங்குவளர் கதிர்ச்செங்கெல் வயப்புரவி முகம்காட்டப் பெரும்சகடு தேர்காட்ட

வினைஞர்ஆர்ப் பொலியிறங்க நெருங்கியசா துரங்கபலம்

நிகர்ப்பனவாம் நிறைமருதம்.' , கரும்-கருமை நிறத்தைப் பெற்ற அடிகளைக் கொண்ட, ஆகுபெயர். கதலி.வாழை மரங்களில் காய்த்திருக்கும்: ஒருமை . பன்மை மயக்கம். ப்:சந்தி. பெரும் @liുഖ யாக இருக்கும். குலைகள்-காய்கள் நிறைந்த குலைகள் களிற்று-ஆண் யானைகளினுடைய ஒருமை பன்மை மயக் கம். க்:சந்தி. கை-துதிக்கைகளினுடைய ஒருமை பன்மை