பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - பெரிய புராண விளக்கம்-8

மயக்கம், ம்:சந்தி. முகம்-முன் இடங்களை ஒருமை பன்மை மயக்கம். காட்ட-தோற்றுமாறு செய்யவும். வாழைத் தாறு கள் வளைந்து தோற்றுவதனால் ஆண் யானைகளினுடைய வளைந்த துதிக்கைகளைப் போலக் காட்சியை அளிக்கும். மருங்கு-அந்தத் திருவாய்மூரினுடைய பக்கங்களில்; ஒருமை பன்மை மயக்கம். வளர். வளர்ந்து நிற்கும், கதிர்ச் செந்நெல்சம்பா நெற்பயிர்களினுடைய கதிர்கள். கதிர்: ஒரு ம்ை பன்மை மயக்கம். நெல்: ஒருமை பன்மை மயக்கம், வய-வலி மையைப் பெற்ற, ப்:சந்தி. புரவி-குதிரைகளினுடைய; ஒருமை பன்மை மயக்கம். முகம்-முகங்களை; ஒருமை பன்மை மயக்கம். காட்ட போன்ற தோற்றத்தைக் கொண்டு விளங் கவும். சம்பா நெற் பயிர்களின் கதிர்கள் முற்றி விளைந்த மையால் வளைந்திருக்கும். அது குதிரைகள் தங்களுடைய முகங்களைத் தரையை நோக்கி வளைத்துக் கொண்டு நிற்ப தைப் போலத் தோற்றும், ப்: சந்தி, பெரும்-பெரியவையாக விளங்கும். சகடு-வண்டிகள்: ஒருமை பன்மை மயக்கம். இவ்ை அறுத்த நெற்கதிர்களை வீடுகளுக்குக் கொண்டு போகப் பயன் படுபவை. தேர்-தேர்களைப் போன்ற தோற்றத்தை, ஆகு பெயர்; ஒருமை பன்மை மயக்கம். காட்ட-காண்பிக்க வும்; அந்த வண்டிகள் இரதங்களைப் போலத் தோற்றத்தை அளிந்தன. வினைஞர்-வயல்களில் வேலைகளைப் புரியும் தொழிலாளர்களாகிய உழவர்களுடைய, ஒரு மை பன்மை மயக்கம். இந்த உழவர்கள் போரில் புத்தம் செய்யும் காலாட் களை நினைப்பூட்டுகிறார்கள். ஆர்ப்பொலி-ஆரவாரச் சத்தம். பிறங்க-விளக்கமாகக் கேட்கவும். நெருங்கிய- இவ் வாறு நெருங்கியுள்ள. சாதுரங்க-தேர், யானை, குதிரை, காலாட்கள் என்ற போருக்கு உரிய நான்கு வகையான அங்கங்களினுடைய. அ க்க: ஒருமை பன்மை மயக்கம். பலம். வலிமையை. நிறை-வளம் நிரம்பியுள்ள. மருதம்-திருவாய் மூரில் இருக்கும் மருத நிலங்கள்: ஒருமை பன்மை ம்யக்கம்.