பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o திருநாவுக்கரசு நாயனார் புராணம் 171

விரட்டானேசுவரருடைய சீர்த்தியை விளங்குமாறு புரியும் வலிமையைப் பெற்றவராகிய அந்தத் திருநாவுக்கரசு நாய னார் அந்தச் சமணர்கள் தமக்கு அளித்த கொடிய பாம்பினுடைய நஞ்சினால் கொடியவர்களாக இருக்கும் சமணர்கள் தமக்குப் படைக்கச் செய்த பாற் சோற்றை உண்டுவிட்டு ஒரு துன்பத்தையும் அடையாமல் அமர்ந்திருந் தார். பாடல் வருமாறு: - “. . . . . .

நஞ்சும்.அமு தாம் எங்கள்

நாதன்.அடி யார்க்கென்று வஞ்சமிகு நெஞ்சுடையார்

வஞ்சனையாம் படிஅறிந்தே செஞ்சடையார் சீர்விளக்கும் х

திறலுடையார் தீவிடத்தால் வெஞ்சமணர் இடுவித்த

பாலடிசில் மிசைந்திருந்தார். . எங்கள்-அடியேங்களுடைய என்றது சேக்கிழார் தம்மை 1.யும் பிற தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. நாதன் .தலைவனாகிய விரட்டானேசுவரனுடைய. அடியார்க்குஅடியவர்களுக்கு ஒருமை பன்மை மயக்கம். நஞ்சும்-பாம் பின் விடமும், அமுதுஆம்-அமுதத்தைப் போல ஆகிவிடும். என்று-என எண்ணி. வஞ்சம்-வஞ்சகச் செயல்களைப் புரிவ தில்; ஒருமை பன்மை மயக்கம்; ஆகுபெயர். மிகு-மிக்க ஆற்றலைப் பெற்ற நெஞ்சு-மனங்களை; ஒருமை பன்மை மயக்கம். உடையார்-பெற்றவர்களாகிய அந்தச் சமணர் -கள்; ஒருமை பன்மை மயக்கம். வஞ்சனை-புரிந்த வஞ்சகம். ஆம்-ஆகும். படி-விதத்தை அறந்து-திருநாவுக்கரசு நாய னார் தெரிந்து கொண்டு. ஏ: அசைநிலை. செம்-சிவப்பாக இருக்கும். சடையார்-சடாபாரத்தைத் தம்முடைய தலை வின்மேற் பெற்றவராகிய அந்த விரட்டானேசுவரருடைய. சீர்-சீர்த்தியை. விளக்கும்-விளங்குமாறு புரியும். திறல்வலிமையை ஆற்றலை. உடையார்-பெற்றவராகிய அந்தத் - -

3 s