பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 175

பற்றுக் கோடாகிய, தன்மையைப் பெற்ற மந்திரங்களால் அந்த நஞ்சைத் தன்னைக் கொல்லாத வண்ணம் அவன் தடுத்து விட்டான் இறந்து போகும்விதம் அந்தத் தரும சேனனுக்கு இல்லாவிட்டால் எங்களுடைய உயிர்களும் உன் லுடைய நீதி முறையும் ஒழிந்து போவது உறுதி." என்று சூழ்ந்து செய்யும் கெட்ட செயல்களினுடைய துறையில் நின்று கொண்டிருந்த அந்தச் சமணர்கள் அந்தப் பல்லவ. மன்னனிடம் இயம்பினார்கள். பாடல் வருமாறு:

“ ‘கஞ்சுகலங் தூட்டிடவும் * . ,

நம்சமயத் தினில்விடம் தீர் தஞ்சமுடை மந்திரத்தால்

சாதியா வகைதடுத்தான்; எஞ்சும்வகை அவற்கிலதேல்

எம்முயிரும் நின்முறையும் துஞ்சுவது திடம். என்றார்

சூழ்வினையின் துறைகின்றார். ' நஞ்சு-நாங்கள் அந்தத் தருமசேனனுக்குப் பாம்பின் விடத்தை. கலந்து-ப ற் சோற்றோடு கலந்து. ஊட்டிட வும். அவனை உண்ணுமாறு செய்தவுடன். நம்-நம்முடைய. - சமயத்தினில்-சமண சமயத்தில். விடம்-பாம்பின் நஞ்சை. தீர்-போக்கும். தஞ்சம்-பற்றுக் கோடாகிய தன்மையை. உடைபெற்ற மந்திரத்தால் - மந்திரங்களால், ஒருமை

பன்மை மயக்கம், சாதியா-அந்த நஞ்சைத் தன்னைக்

கொல்லாத வகை-வண்ணம். தடுத்தான்-அந்தத் தரும் சேனன் தடுத்து விட்டான். எஞ்சும்-இறந்துபோகும். வகைவிதம். அவற்கு-அந்தத் தரும சேனுைக்கு. இலதேல்இல்லாவிட்டால்: இடைக்குறை. எம்-எங்களுடைய, உயிரும்-உயிர்களும்; ஒருமை பன்மை மயக்கம். நின்-உன்னு டைய முறையும்-நியாய முறையும். துஞ்சுவது-ஒழிந்து போவது. திடம்-உறுதி. சூழ்-சூழ்ச்சி செய்து புரியும். வினையின்-கொடிய செயல்களிலுடைய, ஒருமை பன்மை