பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#76 வரிய புராண விளக்கம்-ன்

மயக்கம். துறை-துறையில். நின்றார்-நிலைபெற்று இருத்த: அந்தச் சமணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். என்றார். என்று அந்தப் பல்லவ மன்னனிடம் இயம்பினார்கள்; ஒருமை. பன்மை மயக்கம். - -

அடுத்து வரும் 108-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: அந்தச் சமணர்கள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு: அறிவு கெட்ட வேந்தனாகிய பல்லவனும், ஒறுத்து அந்தத் தருமசேனனை இனிமேல் போக்கும் வகை எந்த வழியால்’’ என்று கேட்க அங்கே வந்திருந்த அந்தச் சமணர்களும், "மந்திரங்களாகிய சாதனையை நாங்கள் செய்து அவனை இமந்து போகுமாறு செய்வதற்கு உன்னுடைய வெற்றி யைப் பெற்ற வலிமையைக் கொண்ட பட்டத்து ஆண் யானைக்கு எதிரில் அந்தத் தருமசேனனை விடுவதே வழி” என்று அந்தச் சமணர்கள் சொன்னார்கள். பாடல் வருமாறு: - ... " -

" மற்றவர்தம் மொழிகேட்டு

மதிகெட்ட மன்னவனும் செற்றவனை இனிக்கடியும்

திறம்எவ்வா, றெனச்செப்ப உற்றவரும், 'மந்திரசா

தகம்நாங்கள் ஒழித்திடநின் கொற்றவயக் களிற்றெதிரே

விடுவதெனக் கூறினார். மற்று: அசைநிலை. அவர்தம்-அந்தச் சமணர்கள் கறிய, ஒருமை பன்மை மயக்கம். தம்:அசை நிலை. மொழிவார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். கேட்டு-சுேட்டு: விட்டு. மதி-அறிவு. கெட்ட-கெட்டுப் போன. மன்ன வனும்-வேந்தனாகிய அந்தப் பல்லவனும் செற்று-ஒறுத்து. அவனை-அந்தத் தருமசேனனை. இனி-இனிமேல். க்சந்தி. கடியும்.போக்கும். திறம்-வகை. எவ்வாறு-எந்த வழியால். எண்-என்று: இடைக்குறை. க்சந்தி. செப்ப-சேட்க.

3. 3