பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார்.புராணம் 19s.

கொண்டிருந்து. குலாவிய-தம்முடைய திருவுள்ளத்தில் தோன்றிய அன்பு-பக்தியை. உறு-அடைந்த கொள்கைகொள்கையைப் பெற்ற த்:சந்தி. தொண்டரை-திருத் தொண்டராகிய திருநாவுக்கரசு நாயனாரை. முன்-அவருக்கு முன்னால், வலமாகச் சூழ்ந்து-பிரதட்சினமாகச் சுற்றிவந்து. எதிர்-அந்த நாயனாருக்கு எதிரில். தாழ்ந்து நிலத்தில்தரையில் படிந்து வணங்கிவிட்டு. எண் திசையோர்களும்கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு என்னும் எட்டுத் திசைகளில் விளங்கும் ஊர்களில் வாழும் மக்கள் யாவரும்; இடஆகு பெயர். திசை ஒருமை பன்மை மயக்கம். காண-பார்க்கும் வண்ணம். இறைஞ்சி-அந்த நாயனாரை வணங்கிவிட்டு. வேழம்-சமணர்கள் அந்த நாயனாரைக்கொல்லும் பொருட்டு அனுப்பிய ஆண் யானை. எழுந்தது-தரையிலிருந்து எழுந்து நின்றது. -

திருநாவுக்கரசு நாயனார் திருவதிகை விரட்டானத்தைப் சீய்ற்றிக் கொல்லிப் பண்ணிலும், காந்தாரப் பண்ணிலும், காந்தார பஞ்சமப் பண்ணிலும் அமைந்த திருப்பதிகங்கள்ை யும், கொப்புளித்த திருந்ேரிசை, திருநேரிசை, திருவிருத்தம், திருக் குறுந்தொ கை. ஏழைத் தி ருத்தாண்டகம், அடையாளத் திருத்தாண்டகம், போற்றித் திருத் தாண்டகம், திருவடித் திருத்தாண்டகம், கர்ப்புத் திருத்தாண்டகம் ஆகியவை அமைந்த திருப்பதிகங்களையும் பாடியருளியுள்ளார். அவற்றில் போற்றித் திருத்தாண்டகம் ஒன்று வருமாறு: . எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி:

எரிசுடராய் நின்ற இறைவா போற்றி, கொல்லார் மழுவாட் படையாய் போற்றி:

கொல்லும்கூற் றொன்றை உதைத்தாய் போற்றி: கல்லாதர் காட்சிக் கரியாய் போற்றி

கற்றார் இடும்பை களைவாய் போற்றி: