பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#90 பெரிய புராண விளக்கம்-6

பிறகு வரும் 17-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அவ்வாறு குளிர்ச்சியைப் பெற்ற செந்தமிழ் மொழியில் அமைந்த மாலைகளாகிய பல திருப்பதிகங்களைப் பாடியருளி தம்முடைய தலைவனாகிய வீரட்டானேசுவரனைச் சரணம் அடையும் தானமாக எண்ணிக் கொண்ட திருவுள்ளத்தோடு தங்கியிருந்து தம்முடைய திருவுள்ளத்தில் நிலவிய பக்தியை அடைந்த கொள்கையைப் பெற்ற திருத்தொண்டராகிய திருநாவுக்கரசு நாயனாரை அவருக்கு முன்னால் வலமாகச் சுற்றி வந்து அவருக்கு எதிரில் தரையில் படிந்து வணங்கி விட்டு, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு என்னும் எட்டுத் திசை களில் விளங்கும் ஊர்களில் வாழும் மக்கள் யாவரும் பார்க் கும் வண்ணம் அந்த நாயனாரை வணங்கிவிட்டுச் சமணர்கள் அவரைக் கொல்லும் பொருட்டு அனுப்பிய ஆண் யானை எழுந்து நின்றது. பாடல் வருமாறு:

- * தண்டமிழ் மாலைகள் பாடித் தம்பெரும்ான்சர ணாகக் கொண்ட கருத்தில் இருந்து

குலாவிய அன்புறு கொள்கைத் தொண்டரை முன்வலமாகச்

சூழ்ந்தெதிர் தாழ்ந்து நிலத்தில் எண்டிசை யோர்களும் காண

இறைஞ்சி எழுந்தது வேழம்.” தண்-அவ்வாறு குளிர்ச்சியைப் பெற்ற. தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த. மாலைகள்-மாலைகளாகிய శ} திருப்பதிகங்களை. பாடி-பாடியருளி. த்:சந்தி, தம்பிதம் முடைய. பெருமான்-தலைவனாகிய வீரட்டானேசுவரனை. சரணாசு.சரணம் அடையும் இடமாக; ஆ குபெயர். க்:சந்தி. கொண்ட-எண்ணிக் கோண்ட கருத்தில்-திருவுள்ளத்தோடு. உருபு மயக்கம். இருந்து-தம்முடைய திருமடத்தில் தங்கிக்