பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 1893 - வதும்; ஒருமை பன்மை மயக்கம்; வினையாலணையும் பெயர். வெம்-ஆகிய வெம்மையைப் பெற்ற, களிற்றினை. சிந்த ஆண்யானையை நோக்கி-திருநாவுக்கரசு நாயனார். பார்த்து. ச்: சந்தி. செம்-சிவப்பாக இருக்கும். சண்ட்சடாபாரத்தைப் பெற்ற நீள்-உயரமாகிய முடி-தலை யைப் பெற்ற. க்:சந்தி, கூத்தர்-நடராஜப் பெருமானாரும். தேவர்க்கும்-எல்லாத் தேவர்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். தேவர்-முதல் தேவரும். பிரானார்-தலைவரும். வெம்-வெம்மையாகிய, சுடர்-ஒளியை வீசும். மூவிலைமூன்று இலைகளைப் பெற்ற, இலை: ஒருமை பன்மை மயக்கம். ச்:சந்தி. சூல-திரிசூலத்தை ஏந்திய. வீரட்டர் தம்-வீரட்டானே சுவரருடைய. தம்:,அசை நிலை. அடியோம்: -திருவடிகளைப் பாதுகாப்பாக உடையோம். நாம்-யாம். அஞ்சுவது-ஆகையால் அடியேம் எதற்கும் பயப்படுவது. இல்லை என்று-இல்லை என . என்று-ளன. ஏ:அசைநிலை. அரும்-பாடுவதற்கு அருமையாக இருக்கும். தமிழ்-செந் தமிழ் மொழியில் அமைந்த ஒரு திருப்பதிகத்தை; ஆகுபெயர். பாடி-பாடியருளி. அறைந்தார் - திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.

மேலே குறிப்பிட்ட திருப்பதிகத்தில் வரும் மற்றொரு பாசுரம் வருமாறு: .

" ஆடல் புரிந்த நிலையும்

அரையில் அசைத்த அரவும் பாடல் பயின்றபல் பூதம்

பல்லா யிரம்கொள் கருவி நாடற் கரியதொர் கூத்தும்

நன்குயர் வீரட்டம் சூழ்ந்து ஒடும் கெடிலப் புனலும்

உடையார் ஒருவர் தமர் நாம் அஞ்சுவதி யாதொன்றும்இல்லை:

அஞ்ச வருவதும் இல்லை." . . . . . . .