பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பெரிய புராண விளக்கம்- ெ

பிறகு வரும் 116-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'வஞ்சகர்களாகிய அந்தச் சமணர்கள் தம்மைக் கோல்லும் பொருட்டு அனுப்பிய கோபத்தைக் கொண்ட, போரைப் புரியும், கன்ன மதம், கபோல மதம், பீஜ மதம் என்னும் மூன்று மதங்களை ஒழுகவிடும் வெம்மையைப் பெற்ற அந்த ஆண் யானையைத் திருநாவுக்கரசு நாயனார் பார்த்து, "சிவந்த சடாபாரத்தைப் பெற்ற உயரமாகிய தலையைப் பெற்ற நடராஜப் பெருமானாரும், எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவரும், தலைவரும், வெம்மை யாகிய ஒளியை வீசும் மூன்று இலைகளைப்பெற்ற திரி சூலத்தை ஏந்தியவரும் ஆகிய திருவதிகை வீரட்டானேசு வரருடைய திருவடிகளைப் பாதுகாப்பாக உடையோம். யாம்; ஆகையால் அடியேம் எதற்கும் பயப்படுவது: இல்லை. என்று என்றே பாடுவதற்கு அருமையாக இருக் கும் ஒரு செந்தமிழ் மாலையாகிய ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளித் திருவாய் மலர்ந்தருளினார். பாடல் வருமாறு: -

" வஞ்சகர் விட்ட சினப்போர் - மதவெங் களிற்றினை நோக்கிச்,

'செஞ்சடை நீள்முடிக் கூத்தர்

தேவர்க்கும் தேவர் பிரானார் வெஞ்சுடர் மூவிலைச் சூல

வீரட்டர் தம் அடி யோம்நாம்; அஞ்சுவ தில்லை’ என்றென்றே

அருந்தமிழ் பாடி அறைந்தார், ’’ வஞ்சகர்-வஞ்சகர்ளாகிய அந்தச் சமணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். விட்டதம்மைக் கொல்லும் பொருட்டு அனுப்பிய. சின.கோபத்தைக் கொண்டதும்; வினையால ணையும் பெயர். ப்:சந்தி. போர்-யுத்தத்தைப் புரிவதும்; வினையாலணையும் பெயர். மத-கன்ன மதம், கபோல மதம், பீஜ மதம் என்னும் மூன்று மதங்களை ஒழுக விடு