பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 187

மாலையாகப் பாடியருளிய. திருப்பதிகத்தை-ஒரு திருப்பதி கத்தை. மண்ணுலகு-இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள் : இடஆகு பெயர். உய்ய-உஜ்ஜீவனத்தை அடையும் வண் ணம். எடுத்து-தொடங்கி. மகிழ்வுடன்-மகிழ்ச்சியோடு. ஏ:அசை நிலை. பாடுகின்றார்-பாடியருளுகிறவர் ஆனார். இந்தப் பாடலில் குறிப்பிட்ட பாசுரத்தைப் பெற்ற திருப்பதிகம் திருவதிகை வீரட்டானத்தைப் பற்றிக் காந்: தர்ரப் பண்ணில் அந்த நாயனார் பாடியருளியது. அதில் வரும் முதற் பாசுரம் வருமாறு: f

சுண்ணவெண் சந்தனச் சாந்தும்

சுடர்த் திங்கட் சூளாமணியும் வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும் அண்ணல் அரண்முரண் ஏறும்

அகலம் வளாய அரவும் திண்ணன் கெடிலப் புனலும்

உடையார் ஒருவர் தமர் நாம் அஞ்சுவதி யாதொன்றும் இல்லை

அஞ்ச வருவதும் இல்லை. இந்தத் திருப்பதிகத்தில் வரும் இறுதிப் பாசுரம் வருமாறு: - - ' நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை உரங்களெல்லாம் கொண்

டெடுத்தான் ஒன்பதும் ஒன்றும்அலற வரங்கள் கொடுத்தருள் செய்வான் வளர்பொழில் வீரட்டம் சூழ்ந்து நிரம்பு கெடில்ப் புனலும் - உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை. "