பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பெரிய புராண விளக்கம்- 6

பெருமையைப் பெற்றவரும், புரிவதற்கு அருமையாக இருக்கும் தவத்தைப் புரிந்த திருநாவுக்கரசு நாயனார் அந்தச் சமணர்கள் தம்மைக் கொல்லும் பொருட்டு ஏவிய ஆண் யானை தம்மேல் ஓடிவருவதைப் பார்த்து எல்லாத் தேவர்களுக்கும் தலைவனாகிய வீரட்டானே சுவரனை, இடபவாகனத்தின்மேல் விருப்பத்தை அடைந்து ஏறி ஒட்டும் தலைவனை, சுண்ணவெண் சந்தனச் சாந்து' என மாலையாகப் பாடியருளிய ஒரு திருப்பதிகத்தை இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம் தொடங்கி மகிழ்ச்சியோடு பாடியருளுகிறவர் ஆனார். பாடல் வருமாறு:

" அண்ணல் அருந்தவ வேந்தர்

ஆனை தம்மேல் வரக்கண்டு விண்ணவர் தம்பெரு மானை

விடையுகங் தேறும் பிரானைச், "சுண்ணவெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப்பதி கத்தை மண்ணுல குய்ய எடுத்து

மகிழ்வுட னேயாடு கின்றார். ' அண்ணல்-பெருமையைப் பெற்றவரும். அரும்-புரிவ தற்கு அருமையாக இருக்கும். த.வ-தவத்தைப் புரிந்த, வேந்தர்-திருநாவுக்கரசு நாயனார். ஆனை-அந்தச் சமணர் கள் தம்மைக் கொல்லும் பொருட்டு ஏவிய ஆண் யானை. தம்மேல் வர-தம்மேல் ஓடிவருவதை வினையாலணையும் பெயர். க்:சந்தி. கண்டு-பார்த்து விண்ணவர்தம்-தேவ லோகத்தில் வாழும் தேவர்களுடைய, ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. பெ. மானை-தலைவ ை கிய விரட்டாசேசுவரன்ை. விடை இட-வாகனத் தின் மேல். உகந்து-மகிழ்ச்சியை அடைந்து. ஏறும்-ஏறி ஒட்டும்: பிரானை-தலைவனை. ச்சந்தி. சுண்ணிவெண் சந்தனச் சாந்து-சுண்ணவெண் சந்தனச்சாந்து' என்று. தொடுத்த