பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 185

பாவக்கொடு வினைமுற்றிய படிறுற்றிடு கொடியோர் காவுக்கர செதிர்முற்கொடு நணுகிக்கரு வரைபோல் ஏவிச்செறு பொருகைக்கரி

யினை உய்த்திட வெருளார் சேவிற்றிகழ்பவர்பொற்கழல்

தெளிவுற் றனர்பெரியோர்.’’ பாவ-பாவமாகிய.க்:சந்தி. கொடு-கொடுமையாக உள்ள. வினை-தீய வினைகளில்; ஒருமை பன்மை மயக்கம். முற்றியமுதிர்ச்சியைப் பெற்ற படிறு.வஞ்சகச் செயல்களை; ஒருமை பன்மை மயக்கம். உற்றிடு.பெற்றுக் கொலையைப் புரியும். கொடியோர்-கொடுமையைப் பெற்றவர்களாகிய அந்தச் சமணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். நாவுக்கரசு-திரு நாவுக்கரசு நாயனாருக்கு எதிர்-எதிரில். முற்கொடுமுற்பட்டு. நனுகி-ஓடிச் சென்று. க்:சந்தி. க ரு-கரு ைம யான. வரை-மலையை, போல்-போல. ஏ. வி - அ ந் த ப் பல்லவ மன்னன் ஏவியதால் ச்:சந்தி. செறு-மோதி. பொருபோர் புரியும் கை-து தி க் கை யை ப் பெற் ற. க்சந்தி. கரியினை-அந்த ஆண் யானையை. உய்த்திட-சமணர்கள் தமக்கு முன்னால் ஒட்டிவிட, வெரு ளார்.அதைக் கண்டு அச்சத்தை அடையாதவராகி; முற்றெச்சம். சேவில்-அந்த நாயனார் இடப வாகனத்தின் மேல்; உருபு மயக்சம். திகழ் பவர்-ஏறிக் கொண்டு விளங்குபவராகிய வீரட்டானேசுவர ருடைய. பொன்-தங்கத்தைப் போன்றவையும்; உவம ஆகு பெயர். கழல்-வெற்றிக் கழலைப் பூண்டவையும் ஆகிய திரு வடிகளை; ஆகுபெயர். பெரியோர்-அந்தப் பெருமையைப் பெற்றவராகிய திருநாவுக்கரசு நாயனார். தெளிவு உற்ற னர்-தெளிவாகத் தியானம் செய்து கொண்டு இருந்தார். அடுத்து உள்ள 115-ஆம் கவியின் கருத்து வருமாறு: