பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பெரிய புராண விளக்கம்-6

ஒருமை பன்மை மயக்கம். உற்று-கொண்டு. இரு-இரண்டு. பிளவிட்டு-பிளவுகளாகச் செய்து: ஒருமை பன்மை மயக்கம். அறு-அவ்வாறு செய்ததனால் அற்று விழுந்த. குறைகுதிரைகளின் உடம்புகளினுடைய துண்டங்களை ஒருமை பன்மை மயக்கம். கை-தன்னுடைய துதிக்கையில். க்:சந்தி, 'கொடு. எடுத்துக் கொண்டு ஓடிச் சென்று. முறிய-இடியுமாறு. ச்:சந்தி. சாடுற்றிடு-அடித்து நொறுக்கிய மதில்-வீடுகளில் உள்ள சுற்றுச் சுவர்களும்; ஒருமை, பன்மை மயக்கம். தெற்றிகள்-திண்ணைகளும். சரிய-சரிந்து வி ழு மாறு. ப்:சந்தி. புடை-பக்கத்தில் இருந்த அணி-அணிவகுத் திருந்த படை வீரர்களை; ஆகுபெயர். செற்று-மோதி அழித்துவிட்டு. ஆடுற்று-அசைந்து கொண்டு. அகல்-அகலமாக உள்ள. வெளி-வெளியிடத்தை. அவ்வடர்-அந்த மோதும். கை-துதிக்கையைப் பெற்ற, க்:சந்தி. குல-சிறப்பை உடைய, வரை-மலையைப் போன்ற ஆண் யானை உவம ஆகுபெயர். உற்றது-அடைந்தது. ஏ:சற்றசை நிலை.

பிறகு வரும் 114-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'பாவமாகிய கொடுமையாக உள்ள தீய வினை களில் முதிர்ச்சியைப் பெற்ற வஞ்சகச் செயல்களைப் பெற்றுக் கொலையைப் புரியும் கொடுமையைப் பெற்றவர் களாகிய அந்தச் சமணர்கள் திருநாவுக்கரசு நாயனாருக்கு எதிரில் முற்பட்டு ஒடிச் சென்று சருமையான மலையைப் போல அந்தப் பல்லவ மன்னன் ஏவியதால் மோதிப் போர் புரியும் துதிக்கையைப் பெற்ற அந்த ஆண் யானையைச் சம ணர்கள் தமக்கு முன்னால் ஒட்டிவிட அதைக் கண்டு அச்சத்தை அடையாதவராகி அந்த நாயனார் இடப வாக னத்தின் மேல் விளங்குபவராகிய வீரட்டானேசுவரருடைய தங்கத்தைப் போன்றவையும் வெற்றிக் கழலைப் பூண்டவை யும் ஆகிய திருவடிகளை அந்தப் பெரியவராகிய திருநாவுக் கரசு நாயனார் தெளிவாகத் தியானம் செய்து கொண்டு இருந்தார். பாடல் வருமாறு: *