பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 193

தொடக்கி-அந்த யானையைக் கட்டிவிட்டு. அடர்த்துஅடித்து. த்:சந்தி. திரித்து-திரியுமாறு செய்து. மீண்டும்மறுபடியும். அதனை-அந்த ஆண்யானையை. அவர்மேல்அந்தத் திருநாவுக்கரசு நாயனாரின் மேல். மிறை செய்துவருத்தத்தை அளித்து. காட்டிட-காட்ட. வீசி-தன்னு: டைய துதிக்கையினால் வீசி எறிந்து விட்டு. கண்டவர் தங்களையே-தன்னைப் பார்த்தவர்களையே. தம்:அசை நிலை. திருநாவுக்கரசு நாயனாரைக் கொல்லாமல் தன் னைப் பார்த்தவர்களையே கொன்று விட்டது. கொன்றுகொலை செய்துவிட்டு. அமணர்மேல்-தன்னை அனுப்பிய சமணர்களின் மேல்; ஒருமை பன்மை மயக்கம். எதிர்ந்துஎதிரிட்டுக் கொண்டு. ஒடிற்று-ஒடிப்போயிற்று. ஏ:ஈற்றசை நிலை. -

பிறகு வரும் 19-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்த ஆண்யானை அவ்வாறு ஓடிச் சென்று அருகத் பரமேஷ்டியை வணங்கும் சமணர்களைத் திரியுமாறு செய்து அவர்களைத் தன்னுடைய கால்களால் மிதித்து அவர்களு டைய உடம்புகளைப் பல துண்டங்களாகச் செய்து பிறகு தேடிச்சென்று வேறு பல மக்களையும் கொலை செய்துவிட்டு அந்த நகரத்தில் வாழும் மக்கள் கலக்கத்தை அடைந்து சுழல நீளமாக உள்ள சமுத்திரத்தைக் கலங்குமாறு செய்யும் உயர மாகிய மந்தர மலையைப் போல அசைந்து கொண்டு அந்த ஆண்யானையும் அந்தப் பல்லவ அரசனுக்கு ம ன க் கவலையை உண்டாக்கியது.” பாடல் வருமாறு:

' ஓடி அருகர்கள் தம்மை -

உழறி மிதித்துப் பிளந்து நாடிப் பலரையும் கொன்று

நகரம் கலங்கி மறுக டிேய வேலை கலக்கும்

நெடுமங் தரகிரி போல்