பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 205.

ஒரு தெப்பமாக மாறி மிதந்தமையால் அவரை இறுகக் கட்டி யிருந்த கயிறும் அவிழ்ந்து விட்டது; அந்தக் கருங்கல்லின் மேல் அமர்ந்திருந்த கெடுதல் இல்லாத சீர்த்தியைப் பெற்ற உண்மையாகிய பெருமையைப் பெற்ற திருத்தொண்டராகிய அந்த நாயனார் விளக்கத்தை அடைந்து காட்சியை அளித் தார். பாடல் வருமாறு: -

" அப்பெருங் கல்லும்அங் கரசு மேல்கொளத்

தெப்பமாய் மிதத்தலிற் செறிந்த பாசமும் தப்பிய ததன்மிசை இருந்த தாருல்சீர் மெய்ப்பெருந் தொண்டனார் விளங்கித் -

தோன்றினார்.” அப் பெரும்-சமணர்கள் தம்மைக் கட்டிச் சமுத்திரத்தில் விட்ட அந்தப் பெரியதாக இருக்கும். கல்லும்-கருங்கல்லும். அங்கு-அந்தச் சமுத்திரத்தில். அரசு-திருநாவுக்கரசு நாய னார்; தி ைண ம ய க் க ம். மேல்கொள.தன்மேல் ஏறிக் கொள்ளுமாறு. கொள:இடைக்குறை. த்:சந்தி. தெப்ப மாய்-ஒரு தெப்பமாக மாறி. மிதத்தலின்-சமுத்திரத்தில் அமிழாமல் மிதந்தமையால். செறிந்த-இறுகக் கட்டியிருந்த, பாசமும்-கயிறும். தப்பியது.கடலினுள் அமிழ்ந்துவிட்டது. அதன் மிசை-அந்தக் கருங்கல்லின் மேல். இருந்த-அமர்ந்: திருந்த தா-கெடுதல். இல்-இல்லா; கடைக்குறை. 斜什一 சீர்த்தியைப்பெற்ற. மெய்-உண்மையாகிய, ப்:சந்தி.பெரும்பெருமையைப் பெற்று விளங்கும். தொண்டனார்-திருத் தொண்டராகிய அந்த நாயனார். விளங்கி-விளக்கத்தை அடைந்து. த்:சந்தி. தோன்றினார்.காட்சியை அளித்தார்.

பிறகு வரும் 129-ஆம் கவியின் கருத்து வருமாறு: புண்ணியம், பாவம் என்னும் இரண்டு வினைகளாகிய பாச பந்தமும், ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று. மலங்களாகிய கருங்கல் கட்டுவதனால் இந்த உலகத்தில் வரும் பிறவியாகிய சமுத்திரத்தில் விழுந்த அறிவில்லாத. மனிதர்கள் கரையேறத் திருவருளை வழங்கும் உண்மை