பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பெரிய புராண விளக்கம்- ே

அமர்ந்திருப்பவனாகிய பிரம தேவன் முதலாகிய தேவர்கள் வாழ்த்துவதற்கு அருமையாக உள்ள ந. ம, சி, வா, ய என்னும் ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தையும் திருநாவுக்கரசு நாயனார் வாழ்த்தி வீரட்டானேசுவரரை வணங்க கருமையாகியதும் ஆழமாக இருப்பதுமாகிய சமுத். திரத்தில் அவரைக் கட்டிப் போட்ட கருங்கல் அமிழாமல் மிதந்தது. பாடல் வருமாறு: -

பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால்

அருமல ரோன்முதல் அமரர் வாழ்த்துதற் கரியஅஞ் செழுத்தையும் அரசு போற்றிடக் கருநெடும் கடலினுட் கல்மி தந்ததே.' - பெருகிய-பெருகி எழுந்த, அன்பினர்-பக்தியை உடைய வராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார். பிடித்த்-தாம் தமக்கு ஒரு பற்றுக் கோடாகப் பற்றிக் கொண்ட பெற்றி. யால்-இயம்பினால். அரு - அருமையாகிய, மலரோன்" தாமரை மலரில் அமர்ந் திருப்பவனாகிய பிரமதேவன். முதல்-முதலாக உள்ள. அமரர்.தேவர்கள் : ஒருமை பன்மை மயக்கம். வாழ்த்துதற்கு-வாழ்த்துவதற்கு அசிய-அரியதாக உள்ள.. அஞ்சு எழுத்தையும் - ந, ம, சி, வா, ய என்னும் ஐந்து எழுத்துக்களும் அடங்கிய பஞ்சாட்சரத்தை. எழுத்து: ஒருமை பன்மை மயக்கம். அரசு-திருநாவுக்கரசு நாயனார்: திணை மயக்கம். போற்றிட-வாழ்த்தி வீரட்டானேசு வரரை வணங்க, க்:சந்தி. கரு-கருமையாகிய, நெடும்ஆழமாக இருக்கும். கடலினுள்-சமுத்திரத்தில், கல். அந்த நாயனாரைக் கட்டிப் போட்ட கருங்கல். மிதந்ததுசமுத்திரத்திற்குள் அமிழாமல் மிதந்து கொண்டிருந்தது. ஏ. ஈற்றசை நிலை. - -

அடுத்து வரும் 128-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

‘சமணர்கள் தம்மைக் கட்டிச் சமுத்திரத்தில் விட்ட அந்தப் பெரியதாகிய கருங்கல்லும் அந்தச் சமுத்திரத்தில் திருநாவுக்கரசு நாயனார் தன்மேல் ஏறிக் கொள்ளுமாறு