பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 203

"சொற்றுணை வேதியன்’ என்னும். சொற்றுணை வேதியன்' என்று தொடங்கும். தூய-பரிசுத்தமாகிய. மொழி-வார்த்தைகள் அடங்கிய; ஒருமை பன்மை மயக்கம். நல்-பிறவிப் பிணியைப் போக்கும் நல்ல. தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த, மாலையா-மாலையாகிய ஒரு திரும் பதிகமாக. நமச்சிவாய என்று-நமச்சிவாய என அற்றம்சோர்வை அடையாத வண்ணம். முன்-முன்கூட்டியே. காக்கும்-பாதுகாக்கும். அஞ்சு எழுத்தை- ந, ம, சி, வா, ய என்னும் ஐந்து எழுத்துக்களும் அடங்கிய பஞ்சாட்சரத்தை. எழுத்து: ஒருமை பன்மை மயக்கம். அன்பொடு-பக்தி யோடு. பற்றிய-இடைவிடாமல் தாம் பற்றுக் கோடாகப் பற்றிக் கொண்டிருந்த உணர்வினால்-உணர்ச்சியோடு: உருபு மயக்கம். பதிகம்-அந்தத் திருப்பதிகத்தை. பாடி வினார்-திருநாவுக்கரசு நாயனார் பாடியருளினார். x

இந்தப்பாடலில் குறிப்பிட்ட திருப்பதிகம் திருநாவுக்கரசு நாயனார் காந்தார பஞ்சமப் பண்ணில் பாடியருளியது. அதில் வரும் முதற் பாசுரம் வருமாறு:

' சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர்கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே." இந்தத் திருப்பதிகத்தில் வரும் இறுதிப் பாசுரம் வருமாறு:

" மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்

பூப்பினை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார் தமக் கிடுக்கண் இல்லையே. அடுத்து உள்ள 127-ஆம் பாடலின் கருத்து வருமாறு: பெருகி எழுந்த பக்தியை உடையவராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தாம் பற்றுக் கோடாகப் பற்றிக் கொண்ட இயல்பின்ால் அருமையான தாமரை மலரில்