பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பெரிய புராண விளக்கம்-6

ஒப்பு அரும்-சமானமாக வேறு ஒன்றைக் கூறுவதற்கு அருமை யாக இருக்கும். ஆழ்-ஆழமாக உள்ள கடல்-சமுத்திரத் தில். புக்க-விழுந்த உறைப்பு-பக்தி மிகுதியாக அடைத்லை. உடைபெற்ற. மெய்த் தொண்டர் தாமும்-உண்மையாகிய திருத்தொண்டராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனாரும். தாம்: அசைநிலை. எப்பரிசு-எந்த விதம். ஆயினும்" ஆனாலும், ஆக-ஆகட்டும். எந்தையை-அடியேனுடைய தந்தையைப் போன்றவனாகிய விரட்டானேசுவரனை. ஏத்துவன்-அடியேன் துதிப்பேன். என்று.என எண்ணி. செப்பிய-தாம் பாடியருளிய. வண்-சொற்சுவை, பொருட் சுவை என்னும் வளப்பத்தைப் பெற்ற. தமிழ் தன்னால்செந்தமிழ் மொழியினால், தன் அசைநிலை. சிவன்-சிவ பெருமானுக்கு உரிய, அஞ்செழுத்தும் - ந, ம, சி, வா, ய என்ற ஐந்து எழுத்துக்களும் அடங்கிய பஞ்சாட்சரத்தை. எழுத்து: ஒருமை பன்மை மயக்கம். துதிப்பார்-உச்சரித்துக் கொண்டு அந்த நாயனார் விரட்டானேசுவரனைத் தோத் திரம் புரிந்தருளுபவரானார்.

பிறகு வரும் 126-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'சொற்றுணை வேதியன்’ என்று தொடங்கும் பரிசுத்தமாகிய வார்த்தைகள் அடங்கிய நல்ல தமிழ் மாலை யாகிய ஒரு திருப்பதிகமாக, நமச்சிவாய' என சோர்வை அடையாமல் முன்னால் பாதுகாக்கும் ந, ம, சி, வா , ய என்னும் ஐந்து எழுத்துக்களும் அடங்கிய பஞ்சாட்சரத்தைப் பக்தியோடு தம்முடைய திருவுள்ளத்தில் பற்றிக் கொண் டிருந்த உணர்ச்சியோடு அந்தத் திருப்பதிகத்தைத் திருநாவுக் கரசு நாயனார் பாடியருளினார். பாடல் வருமாறு:

' சொற்று ணைவேதியன்' என்னும் தூயமொழி

கற்றமிழ் மாலையா, 'நமச்சி வாய' என் நற்றமுன் காக்கும்அஞ் செழுத்தை அன்பொடு பற்றிய உணர்வினால் பதிகம் பாடினார்.’’