பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு நாவுக்கரசு நாயனார் புராணம் 204

அடுத்து வரும் 125-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்த இயல்பில் அந்தக் கொடிய செயலாகிய திருநாவுக் கரசு நாயனாரைக் கருங்கல்லோடு கட்டி வைத்துச் சமுத்தி ரத்தில் விடுவதை நிறைவேற்றிவிட்டு அந்தச் சமணர்கள் சமுத் திரக் கரையை விட்டு நீங்கிப் போன பிறகு ஒப்புக் கூறு தற்கு அருமையாக இருக்கும் ஆழமாகிய சமுத்திரத்தில் விழுந்த பக்தி மிகுதியாக அடைதலைப் பெற்ற உண்மை யாகிய திருத்தொண்டராகிய அந்தத் திருநாவுக்கரசு நாய னாரும், 'எந்த விதமானாலும் ஆகட்டும்; அடியேனுடைய தந்தையைப் போன்ற வீரட்டானேசுவரனை அடியேன் துதிப் பேன்' என எண்ணித் தாம் பாடியருளிய சொற்சுவை, பொருட்சுவை என்னும் வளப்பத்தைப் பெற்ற செந்தமிழ் மொழியினால் சிவபெருமானுக்கு உரிய ந, ம, சி, வா, ய என்ற ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தை உச்ச ரித்துக் கொண்டு அந்த வீரட்டானேசுவரனை அந்த நாய னார் தோத்திரம் புரிந்தருளுபவரானார். பா ட ல் வருமாறு: * -

அப்பரி சவ்வினை முற்றி

அவரகன் றேகிய பின்னர் ஒப்பரும் ஆழ்கடல் புக்க

உறைப்புடை மெய்த்தொண்டர் தாமும் " எப்பf சாயினும் ஆக:

ஏத்துவன் எந்தையை." என்று செப்பிய வண்டமிழ் தன்னால்

சிவன்அஞ் செழுத்தும் துதிப்பார்.' அப்பரிசு-அந்த இயல்பில். அவ்வினை-அந்தக் கொடிய செயலாகிய திருநாவுக்கரசு நாயனாரைக் கருங்கல்லோடு கட்டி வைத்து ஒரு படகில் இருக்கச் செய்து சமுத்திரத்தில் விடுவதை. முற்றி - நிறைவேற்றிவிட்டு. அவர் - அந்தச் சமணர்கள்: ஒருமை பன்மை மயக்கம். அகன்று-சமுத்திரக் - கரையை - விட்டு. ஏகிய-நீங்கிப்போன. பின்னா-பிறகு.