பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பெரிய புராண விளக்கம்-6

தருளினார்; சமுத்திரத்தில் அந்தப் பல்லவ வேந்தன் கூறிய

படியே அந்தத் திருநாவுக்கரசு நாயனாரைத்தள்ளிவிட்டு .

அந்தப் பாதகர்களாகிய சமணர்கள் நிறைவேற்றினார்கள்." பாடல் வருமாறு: :

" அவ்வினை செய்திடப் போகும்

அவருடன் போய்அரு கந்த வெவ்வினை யாளரும் சென்று . மேவிட நாவுக் கரசர்

செவ்விய தம்திரு வுள்ளம்

சிறப்பு அவருடன் சென்றார்; பவ்வத்தில் மன்னவன் சொன்ன

படிமுடித் தார்அப் பதகர். - - அவ்வினை-அந்த வேலையை செய்திட-செய்வதற்காக,

ப்:சந்தி. போகும்-சமுத்திரத்திற்குச் செல்லும். அவருடன்

அந்தச் சமணர்களோடு, ஒருமை பன்மை மயக்கம். போய். தாமும் எழுந்தருளி. அருகந்த-அருகத் பரமேஷ்டியை வணங்குபவர்களும்; ஆகுபெயர். வெவ்-கொடுமையாகிய,

வினையாளரும்-செயல்களைப் புரிபவர்களும் ஆகிய அந்தச் சமணர்களும்; ஒருமை பன்மை மயக்கம். வினை:ஒருமை பன்மை மயக்கம். சென்று-போய். மேவிட-சமுத்திரத்தை

அ ைட ய. நாவுக்கரசர் - திருநாவுக்கரசு நாயனார். செவ்விய-செம்மையாகிய. தம்-தம்முடைய. திருவுள்ளம் சிறப்ப-திருவுள்ளம் சிறப்பாக அமைய. அவருடன்-அந்தச் அமணர்களோடு ஒருமை பன்மை மயக்கம். சென்றார். எழுந்தருளினார். பவ்வத்தில்-சமுத்திரத்தில். மன்னவன்அந்தப் பல்லவ வேந்தன். சொன்னப்டி-கூறியபடியே. அப் பதகர்-அந்தப் பாதகர்களாகிய சமணர்கள்: ஒருன்டி பன்மை மயக்கம். முடித்தார்.அந்தத் திருநாவுக்கரசு நாயனாரைத்

தள்ளிவிட்டு நிறைவேற்றினர்ர்கன் ஒரும்ை பன் மை

மயக்கம்.

  • *