பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 207

பிறவிக் கடலை ஏறவிடும் நற்கருணை ஒடக்காரதும்." 'முடியாப் பிறவிக் கடறிற் புகார்.’’ என்று அருணகிரி நாதரும், 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர்.' (திருக்குறளி, என்று திருவள்ளுவரும் பாடியருளியவற்றைக் காண்க.

பிறகு வரும் 130-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'வீரட்டானேசுவரர் வழங்கிய திருவருளை விரும்பி த, ம, சி, வா, ய என்னும் ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ் சாட்சரத்தை உச்சரித்து அந்த ஈசுவரரைத் துதிக்கும் பாக்கி யத்தைப் பெற்ற அந்தக் கருணையை உடைய திருநாவுக் கரசு நாயனாரை அலைகளாகிய கைகளால் தெளிவைப் பெற்ற வழியாகிய இயல்போடு தன்னுடைய தலையில் சுமந்து கொண்டு வந்து சமுத்திரத்தினுடைய கரையின்மேல் ஏற்றும் செயலைச் சமுத்திரத்திற்கு ம ன் ன னாகிய வருணனும் முன் பிறவியில் பெரிய தவத்தைப் புரிந்தான்.” பாடல் வருமாறு:

அருள்கயங் தஞ்செழுத் தேத்தப் பெற்றஅக் கருணைநா வரசினைத் திரைக்க ரங்களால் தெருள்நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட வருணனும் செய்தனன் மூன்பு மாதவம்.” அருள்-வீரட்டானேசுவரர் வ ழ ங் கி ய திருவருளை. நயந்து-விரும்பி, அஞ்சு எழுத்து-ந, ம, சி, வா, ய என்னும் ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தை உச்சரித்து. எழுத்து: ஒருமை பன்மை மயக்கம். ஏத்தப் பெற்ற-அந்த ஈசுவரரைத் துதிக்கும் பாக்கியத்தைப் பெற்ற. அக்கருணைஅந்தக் கருணையைப் பெற்ற, நாவரசினை-திருநாவுக்கரசு நாயனாரை. அரசு:திணை மயக்கம். த்:சந்தி. திர்ை-தன் .ணுடைய அலைகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. கரங்களால்-கைகளால் தெருள்-தெளிவைப் பெற்ற நெறிவழியில் அமைந்த நீர்மையின்-இயல்போடு. சிரத்தில்தன்னுடைய தலையில். தாங்கிட-சுமந்து கொண்டு வந்து சமுத்திரத்தினுடைய கரையின்மேல் ஏற்றும் செயலை.