பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 21

தாற் போல உயர்ந்து நிற்கும் பலவகையான மரங்களில் மலர்ந்த மலர்கள் நறுமணம் கமழும் பூம்பொழில்கள் அந்தத் திரு வாய்மூரில் விளங்கும். பாடல் வருமாறு:

மொய்யளிசூழ் நிரைநீல

முழுவலயங் களின்அலையச் செய்யதளிர் நறுவிரலிற்

செழுமுகையின் நலம்சிறப்ப மெய்யொளியின் கிழற்கானும் ஆடியென வெண்மதியை வையமகள் கை யணைத்தாற்

போலுயர்வ மலர்ச்சோலை."

மோய்-பறந்து வந்து மொய்க்கும். அளி-வண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். சூழ்-சுற்றிப் பறக்கும். நிரை -வரிசை. நீல-நீலநிறத்தைப் பெற்ற, முழு-முழுமையாகிய. வலையங்களின்-வளைகளைப் போல. அலைய-அலைந்து திரிய. ச்சந்தி. செய்ய-சிலந்த. தளிர் - தளிர்களைப் போன்ற; ஒருமை பன்மை மயக்கம். தளிர்-முற்றாத இலை. நறு-நறுமணம் கமழும். விரலின்-விரல்களைப் போல; ஒருமை பன்மை மயக்கம் செழு-செழுமையாகிய, முகையின்அரும்புகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம், நலம்-அழகு; சிறப்ப-சிறந்து விளங்க. மெய்-தன்னுடைய திருமேனியின். ஒளியின்-பிரகாசத்தினுடைய. நிழல்-பிரதி பிம்பத்தை. காணும்-பார்க்கும். ஆடி-கண்ணாடி. என-என்று கூறுமாறு: இடைக்குறை. வெண்-வெள்ளை நிறத்தைப் பெற்ற. மதியை-சந்திரனை. வையமகள்-நிலமடந்தை. கை-தன்னு டைய கைகளால்; ஒருமை பன்மை மயக்கம். அணைத் தாற்போல்-தழுவிக் கொண்டதைப் போல. மலர்-பலவகை யான மரங்களில் மலர்ந்த மலர்கள் நறுமணம் கமழும்; ஒருமை மின்மை மயக்கம். அசத்தி. சோலை-பூம்பொழில்

தி-2