பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பெரிய புராண விளக்கம்-6

'நிலை பெற்று விளங்கிய பக்தியைக்கொண்ட நீர் வளம், நில வளம், செல்வ வளம், நன்மக்கள் வளம் முதலிய வளப் பங்களைக் கொண்ட பெரிய ஊராகிய அந்தத் திருவதிகை வீரட்டானத்தில் வாழும் ஆண் மக்களும், விளங்குகின்ற அணிகலன்களை அணிந்து கொண்டிருந்த பெண்மணிகளும் இனிமையாகக் கேட்கும் ஒசையும், ச, ரி, க, ம, ப, த, நிச என்னும் ஏழு சுவரங்களைப் பெற்ற இசைப் பாடல்களின் கானமும், எல்லா விடங்களிலும் எழுந்து மிகுதியாக ஒலிக்க தங்கத்தால் அமைந்த சுண்ணத்தையும், மலர்களையும், நேற்பொரிகளையும் எல்லா இடங்களிலும் தூவி வைத்து அந்தப் பழமையான நகரமாகிய திருவதிகை வீரட்டானத் தின் வெளியிடத்திற்கு யாவரும் சுற்றிவந்து திருத்தொண்ட ராகிய திருநாவுக்கரசு நாயனாரை எதிரில் சென்று வர வேற்றார்கள். பாடல் வருமாறு:

" மன்னிய அன்பின் வளநகர்மாந்தர்

வயங் கிழையார் இன்னிய காதமும் ஏழிசை

ஓசையும் எங்கும் விம்மப் பொன்னியல் சுண்ணமும் பூவும்

பொரிகளும் தூவி எங்கும் தொன்னக ரின்புறம் சூழ்ந்தெதிர்

கொண்டனர் தொண்ட ரையே. ' . . . மன்னிய-நிலை பெற்று விளங்கிய. அன்பின்-பக்தி யைக் கொண்ட வள-நீர் வளம், நில வளம், செல்வ வளம், நன்மக்கள் வளம், திருமாளிகை வளம் முதலிய வளப்பங்களைக் கொண்ட, ஒருமை பன்மை மயக்கம். நகர்-பெரிய சிவத்தலமாகிய அந்தத் திருவதிகை வீரட்டா னத்தில் வாழும்; இடஆகு பெயர். மாந்தர்-ஆடவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். வயங்கு-விளங்கும். இழையார்அணிகலன்களை அணிந்து கொண்டிருக்கும் பெண்மணி" களும்; ஒருமை பன்மை மயக்கம். அந்த அணிகலன்