பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 224

தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச்செஞ் சாந்து நீவி அணிநகர் முன்னை அனிமேல்

அணிசெய் தலங்க ரித்தார். '

இது திருநாவுக்கரசு நாயனாரை வரவேற்பதற்காகத் திருவதிகை வீரட்டானத்தில் வாழும் பக்தர்கள் புரிந்த வற்றைக் கூறுவது. மன அந்தத்திருவதிகைவிரட்டானத்தில், வாழும் பக்தர்கள் அழகிய நெடும்-நீளமாக இருக்கும். தோரணம்-தோரணங்களையும் ஒருமை பன்மை மயக்கம். வண்-வளப்பத்தைப் பெற்ற. குலை-தலைகளைக் கொண்ட, ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பூகம்-பாக்கு மரங்: கல்ைாயும்; ஒருமை பன்மை மயக்கம். மடல்-மடல்களைப் பெற்ற, ஒருமை பன்மை மயக்கம். கதலி-வாழை மரங் களையும்: ஒருமை பன்மை மயக்கம். இணை உற-ஒன்றுக்கு ஒன்று சமமாக அமையும் வண்ணம். நாட்டி-தட்டுவைத்து, எழு-ஏழு. நிலை-தளங்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். க்சந்தி. கோபுரம்-கோபுர வாசலிலும், தெற்றி .திண்ணைகள்: ஒருமை பன்மை மயக்கம். எங்கும். ஆகிய எல்லா இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். தணிவுகுறைதல். இல்-இல்லாத, கடைக்குறை. பெருகு ஒளிபிரகாசம் பெருகி வீசிய, த்:சந்தி. தாமங்கள்-மலர் மாலை களை. நாற்றி-தொங்கவிட்டு, ச்:சந்தி. செம்-சிவப்பாக இருக்கும். சாந்து-அரைத்த சந்தனத்தைக் கொண்டு. நீவிதரையை மெழுகி. அணி-அழகைப் பெற்ற, நகர்-பெரிய, சிவித்தலமாகிய அந்தத் திருவதிகை வீரட்டானத்தை, முன்னை-முன்பு இருந்த அணி-அலங்காரங்களுக்கு ஒருமை. பன்மை மயக்கம். மேல்-மேலாக அமையும் வண்ணம். அணி செய்து-அவர்கள் அலங்காரங்களைப் புரிந்து. அணி: ஒருமை பன்மை மயக்கம். அலங்கரித்தார்-அலங்காரம் செய்து வைத்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். -

ஆடுத்து உள்ள 139-ஆம் பாடலின் கருத்து வருமாறு: