பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224. பெரிய புராண விளக்கம் - 6

தையும் நைவை அடைந்து உருக்கத்தைப் பெற்றுப் பாய்வ தைப் போலப் பக்தி பினால் நீரைச் சொரியும் திருவிழி களையும், திருப்பதிகங்களாகிய செம்மையாகிய செந்தமிழ்ச் சொற்கள் மேவிய சிவந்த அதரங்களைக் கொண்ட திருவா யையும் உடைய அந்தத் திருநாவுக்கரசு நாயனார் ஒரு திரு. வீதிக்குள் நுழைந்தார். பாடல் வருமாறு:

தூயவெண் ணிறு துதைந்தபொன்

மேனியும் தாழ் வடமும் - நாயகன் சேவடி தைவரும்

சிந்தையும் நைந்து ருகிப் பாய்வது போல்அன்பு நீர்பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல் மேயசெவ் வாயும் உடையார்

புகுந்தனர் வீதி யுள்ளே. ' து ய-பரிசுத் தயாக உள்ள. வெண்-வெண்மையாகிய. நீறு-விபூதியை. து ைதந்த-முழுவதும் பூசிக் கொண்ட. பொன்-தங்கத்தைப்போலச் சிவந்த மேனியும்-திருமேனி யையும். தாழ்-தம்முடைய திருமார்பில் தொங் கும். வடமும்-உருத்திராக்க மாலையையும். நாயகன்-தம்முடைய, தலைவனாகிய வீரட்டானேசுவரனுடைய. சேவடி-செந்தா மரை மலர்களைப் போலச் சிவந்து விளங்கும் திருவடிகளை; அடி:ஒருமை பன்மை மயக்கம். தைவரும் தழுவிக் கொண்டு. தியானிக்கும். சிந்தையும் திருவுள்ளத்தையும், நைந்துநைவை அடைந்து. உருகி-உருக்கத்தைப் பெற்று. ப்: சந்தி. பாய்வதுபோல்-ஒடுவதுபோல. அன்பு-பக்தியினால், நீர்நீரை. பொழி-இடைவிடாமல் சொரிந்து கொண்டிருக்கும். கண்ணும்-திருவிழிகளையும்; ஒருமை பல மை மயக்கம். பதிக-தேவாரத் திருப்பதிகங்களாகிய, ஒருமை பன்மை: மயக்கம். ச்:சந்தி. செம்-செம்மையாகிய, சிறப்பாக உள்ள. சொல்-செந்தமிழ்ச் சொற்கள்; ஒருமை பன்மை மயக்கம். மேய-மேவிய, செவ்வாயும்-சிவந்த அதரங்களைக்கொண்ட