பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 22s

திருவாயையும். உடையார்-பெற்றவராகிய அந்தத் திரு நாவுக்கரசு நாயனார். வீதியுள்ளே-திருவதிகை வீரட்டானத் தில் உள்ளே ஒரு தெருவுக்குள். ஏ:ஈற்று அசை நிலை. புகுந்தனர்-நுழைந்தார். விபூதி தூய்மையானது என்பதைப் புலப்படுத்தும் இடங்களை முன்.ே ஒரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. . . . . . . அடுத்து வரும் 141-ஆம் கவியின் கருத்து வருமாறு: அவ்வாறு ஒரு தெருவுக்குள் எழுந்தருளிய திருநாவுக் கரசு நாயனாரைப் பார்த்த திருவதிகை விரட்டானத்தில் வாழும் ஆடவர்களும் பெண்மணிகளும் பார்த்தார்கள்; தங்களுடைய கைகளைத் தங்களுடைய தலைகளின் மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டுவிட்டுப் பிறகு தரையில் விழுந்து வணங்கி எழுந்து நின்று கொண்டு. இத்தகைய கருணை யைப் பார்த்தால் கொடுமையாகிய செயல்களைப் புரியும் சமணர்களாகிய இழித்தவர்கள் இவருக்குத் துன்பத்தை உண்டாக்க சினம் உண்டானவாறு எவ்வண்ணம்?’ எனக் கூறுவார்கள்; பிறகும் அவரைத் தொண்டராகத் தடுத்து ஆட்கொண்ட தலைவனாகிய வீரட்டானேசுவரனை வணங்கி அவர்கள் தோத்திரங்களைக் கூறினார்கள். பாடல்

வருமாறு: - . ' கண்டார்கள் கைதலை மேல்

குவித்திந்தக் கருணை கண்டால் மிண்டாய செய்கை அமண்கையர் தீங்கு விளைக்கச் செற்றம் . உண்டாயின வண்ணம் எவ்வண்ணம்? என்றுரைப் பார்கள்; பின்னும் தொண்டாண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்த னரே. ’ கண்டார்கள் அவ்வாறு ஒரு தெருவுக்குள் எழுந்தருளிய திருநாவுக்கரசு நாயனாரைப் பார்த்தவர்களாகிய திரு வதிகை விரட்டானத்தில் வாழும் ஆடவர்களும் பெண்மணி