பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பெரிய புராண விளக்கம்-க

தொடர்ந்து-அந்த நாயனார் மேலே தொடர்ந்து. எழுவார். எழுந்து செல்வாரானார். .

அடுத்து வரும் 148-ஆம் கவியின் கருத்து வருமாறு: "அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருவதிகைவீரட் டானம் எ ன் னு ம் சிவத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூருக்கும். அபிராமேசுவரர் திரு. வருளை வழங்கும் திரு ஆமாத்துருக்கும், திருக்கோவலூர் முதலாக உள்ள அழகிய சிவத்தலங்கள் பிறவற்றிற்கும் அந்த நாயனார் எழுந்தருளி அந்தத் தலங்களில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் களைப் பணிந்து விட்டு, சொற்சுவை, பொருட்சுவை என்னும் சுவைகளாகிய வளப்பத்தைப் பெற்ற செந்தமிழ்த் திருப்பதிகங்களைப் பாடியருளிப் பெருகி எழுந்த விருப்பத் தோடு இடப வாகனத்தை ஒட்டுபவராகிய சிவக்கொழுந் தீசர் மகிழ்ச்சியைப் பெற்று எழுந்தருளியிருக்கும் பெண்ணா கடத்திற்கு எழுந்தருளி அடைந்தார்.’ பாடல் வருமாறு: -

" திருவதிகைப் பதிமருங்கு

திருவெண்ணெய் கல்லூரும் அருளுதிரு ஆமாத்துார்

திருக்கோவ லூர்முதலா மருவுதிருப் பதிபிறவும்

வணங்கிவளத் தமிழ்பாடிப் பெருகுவிருப் புடன்விடையார் 毅

மகிழ்பெண்ணாகடம் அணைந்தார். ' திருவதிகை-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திரு. வதிகை வீரட்டானம். ப்:சந்தி. பதி-என்னும் சிலத் தலத் திற்கு. மருங்கு-பக்கத்தில் உள்ள. திருவெண்ணெய், நல்லூரும்-திருவெண்ணெய் நல்லூருக்கும். அருளு-அபி ராமேசுவரர் தம்முடைய திருவருளை வழங்கும். ஆமாத் துர்-திருவாமாத்துனருக்கும். திருக்கோவலூர் முதலா-திருக்