பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 235

"இந்நாளில் திருப்பணிகள்

செய்கின்ற இன்றமிழ்க்கு மன்னான வாகீசத்திருமுனியும்

மதிச்சடை மேல் பன்னாகம் அணிந்தவர்தம்

பதிபலவும் சென்றிறைஞ்சிச் சொன்னாமத் தமிழ்புனைந்து

தொண்டுசெய்வான் தொடர்ந்தெழுவார். ' இந்நாளில்-இந்தக் காலத்தில். திருப்பணிகள்-திருப்பணி களை. செய்கின்ற-புரிந்து வருகின்ற. இன்-இனிய சொற். .சுவை, பொருட்சுவை என்னும் சுவைகளைப் ப்ெற்ற. தமிழ்க்கு-செந்தமிழ் மொழிக்கு. மன் ஆன-அரசர் ஆன. வாசே-வாகீசர் என்னும், த்:சந்தி. திரு-அழகிய முனியும்முனிவராகிய திருநாவுக்கரசு நாயனாரும். மதி-பிறைச் சந்திரன் தங்கியிருக்கும். ச்சந்தி. சடைமேல்-சடாபாரத் தின்மீது. பல்-பல. நாகம்-பாம்புகளை ஒருமை பன்ம்ை மயக்கம். அணிந்தவர்தம்-அணிந்திருப்பவர்களாகிய சிவ பெருமான்கள் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். தம்: அசை நிலை. பதி-சிவத்தலங்கள்; ஒருமை பன்மை மயக்கம். பலவும்-பலவற்றிற்கும். சென்று-அந்தத் திரு நாவுக்கரசு நாயனார் எழுந்தருளி. இறைஞ்சி-அந்தத் தலங் களில் எழுந்தளியிருக்கும் சிவபெருமான்களை வணங்கி விட்டு. ச்:சந்தி, சொல்-இனிய சுவையைப் பெற்ற சொந் களைக் கொண்டவையும்; வினையாலணையும் பெயர். சொல்: ஒருமை பன்மை மயக்கம். நாம-சிவபெருமானு ஆடைய திருநாமத்தை வைத்துப் பாடியிருப்பவையும் ஆகிய. த்:சந்தி, தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த பல திருப் பதிகங்களை ஆகு பெயர். புனைந்து-அந்தச் சிவபெருமான் களுக்குச் சூட்டி. தொண்டு.தமக்கு உரிய தொண்டுகளை ஒருமை பன்மை மயக்கம். செய்வான்-புரியும் பொருட்டு: