பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பெரிய புராணி விளக்கம்-5

உணர்ந்த-தெரிந்து கொண்ட காடவனும்-அந்தப் பல்லவ மன்னனும். திருவதிகை நகரின்கண்-திருவதிகை வீரட் டானம் என்னும் பெரிய சிவத்தலத்தில் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும். கண்ணுதற்கு-தம்முடைய நெற்றியில் ஒற்றைக் கண்ணைப் பெற்றவராகிய வீரட்டானேசுவர ருக்கு. ப்:சந்தி. பாடலி புத்திரத்தில்-பாடலிபுத்திரமாகிய திருப்பாதிரிப்புலியூரில், அமண்-சமணத் துறவிகள் தங்கி யிருக்கும்; திணை மயக்கம். பள்ளியொடு-பள்ளிகளோடு; ஒருமை பன்மை மயக்கம். பாழிகளும்-மலைக்குகைகளையும். கூட-சேர. இடித்து-இடித்துவிட்டு. க்:சந்தி. கொணர்ந்துஅவற்றில் இருந்த பொருள்களைக் கொண்டு வந்து, குணபர விச்சரம்-குணபர வீச்சரம் என்னும் திருநாமத்தைப் பெற்ற திருக்கோயிலை. எடுத்தான்-கட்டினான்.

பிறகு வரும் 147-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'இந்தக் காலத்தில் திருப்பணிகளைப் புரிந்து வருகின்ற இனிய சொற்சுவை. பொருட்சுவை என்னும் சுவைகளைப் பெற்ற செந்தமிழ் மொழிக்கு அரசராகிய வாகீசர் என்னும் அழகிய முனிவராகிய திருநாவுக்கரசு நாயனாரும் பிறைச் சந்திரன் தங்கியிருக்கும் தம்முடைய சடாபாரத்தின் மேல் பல பாம்புகளை அணிந்திருப்பவர்களாகிய சிவபெருமான்கள் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவத் தலங்கள் பலவற்றிற்கும் அந்த நாயனார் எழுந்தருளி அந்தத் தலங்களில் எழுத்தருளி யிருக்கும் சிவபெருமான் களை வணங்கி விட்டு இனிய சுவையைப் பெற்ற சொற் களைக் கொண்டவையும், சிவபெருமானுடைய திரு. நாமத்தை வைத்துப் பாடியிருப்பவையும் ஆகிய செந்தமிழ் மொழியில் அமைந்த பல திருப்பதிகங்களை அந்தச் சிவ பெருமான்களுக்குச் சூட்டி தமககு உரிய தொண்டுகளைப் புரியும் பொருட்டு அந்த நாயனார் மேலே தொடர்ந்து எழுந்து செல்வாரானார். பாடல் வருமாறு: