பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 233:

பெற்ற விடையோன்-இடபவாகனத்தை ஒட்டுபவனாகிய, அந்த வீரட்டானேசுவரனுடைய. தாள்-திருவடிகள்ை: ஒருமை பன்மை மயக்கம். அடைந்தான்-போய்ச் சேர்ந்தான். சிவகதியை அடைந்தான் என்பது கருத்து.

அடுத்து வரும் 145ஆம் பாடலின் கருத்து வருமாறு: முக்தி இன்னதென்று தெரிந்து கொள்ளாத சமணர்கள். கூறிய வார்த்தைகளைப் பொய்யான வார்த்தைகள் என எண்ணி உண்மையைத் தெரிந்து கொண்ட அந்தப் பல்லவ. மன்னனும் திருவதிகை வீரட்டானம் என்னும் பெரிய சிவத் தலத்தில் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் தம்முடைய நெற்றியில் ஒற்றைக் கண்ணைப் பெற்றவராகிய வீரட் டானேசுவரருக்குப் பாடலிபுத்திரமாகிய திருப்பாதிரிப் புலியூரில் சமணத் துறவிகள் தங்கியிருக்கும் பள்ளிகளோதி மலைக்குகைகளையும் சேர இடித்துவிட்டு அவற்றில் இருந்த பண்டங்களைக் கொண்டுவந்து குணபர வீச்சரம் என்னும் திருக்கோயிலை அந்தப் பல்லவ மன்னன் கட்டினான். பாடல் வருமாறு: - - -

வீடறியாச் சமணர்மொழி

பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனும் திருவதிகை

நகரின்கட் கண்ணுதற்குப் பாடலிபுத் திரத்தில்அமண்

பள்ளியொடு பாழிகளும் கூடஇடித் துக்கொணர்ந்து

குணபரவிச் சரம்.எடுத்தான். ' வீடு-முத்தி இன்னதென்று. அறியா-தெரிந்து கொன் ளாத. ச்:சந்தி, சமணர்.சமணர்கள்: ஒருமை பன்மை மயக்கம். மொழி-கூறிய வார்த்தைகளை, ஒருமை பன்ம்ை மயக்கம். பொய்-பொய்யான வார்த்தைகள்: ஒரும்ை பன்மை மயக்கம். என்று-என எண்ணி. aேப்-உன்மையை,