பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 23

பன்மை மயக்கம். பதிகள்-ஊர்களில் உள்ள. எங்கும்.எந்த இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். மணம்-நறுமணம். தங்கும்-தங்கிக் கமழும். வயல்-வயல்களில் வளர்ந்து நிற்கும்: ஒருமை பன்மை மயக்கம். பயிர்க்கண்-பல வகையான பயிர் கள் விளையும் இடங்களாகிய, பயிர்: ஒருமை பன்மை மயக் கம். கண்: ஒருமை பன்மை மயக்கம். அந்தப் பயிர்களாவன: சம்பா நெற் பயிர்கள், குறுவை நெற் பயிர்கள், மணற்கத்தை நெற் பயிர்கள், கரும்புச் செடிகள், வெற்றிலைக் கொடிகள் முதலியவை. வியல்-அகலமாகிய இடங்கள் பல-பலஇடங்கள். பரந்து-பரவலாக இருந்து. உயர்-உயரமாக உள்ள, நெல். நெற்கதிர்களைச் சேமித்து வைக்கும். ஒருமை பன்மை மயக் கம். கூடுகளும்-குதிர்களும். வெயில்-சூரியன் வீசும் வெயிலைப் போல. கதிர்-ஒளியை வீசும். குழை-குழைகளைத் தங்க ளுடைய காதுகளில் அணிந்திருக்கும்; ஒருமை பன்மை மயக் கம். மென்-மென்மையாக உள்ள. மகளிர்-பெண்மணிகள், விரவிய-ஒருவரோடு ஒருவர் கலந்து வாழும், மாடமும்மாடங்களும்; ஒருமை பன்மை மயக்கம். மேவி-உயரமாக நின்று. மயில்-மயில்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். குலமும்-கூட்டமும். முகில்-மேகங்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். குலமும்-கூட்டமும். மாறாட-ஒன்றுக்கு ஒன்று வேறு வேறாக நின்று நடனம் புரிய. மருங்கு-அந்தத் - திருவாய்மூரினுடைய பக்கங்களில்; ஒருமை பன்மை மயக்கம். ஆடும்-அந்த மயில்களினுடைய கூட்டமும் மேகங்களினு டைய கூட்டமும் அசைந்து அசைந்து ஆடுபவைகளாக விளங்கும். . * . . . . . . . . . . . . . . .

பிறகு உள்ள 11-ஆம் பாடலின் கருத்துவருமாறு: பாவத்தை உண்டாக்கும் கெட்ட் வழி மாறுமாறு நீல

மணியைப் போல ஆலகால விடத்தை விழுங்கியமையால்

நீலமாக விளங்கும் திருக்கமுத்தைப் பெற்றவராகிய .

நடராஜப் பெருமானாருக்கு களில் உண்மையைப் பெற்ற,