பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - பேரிய புராண விளக்கம்-6

சைவ சமய வழியையும் தருமங்களையும் வழங்கும் திருநாவுக் கரசு நாயனாரும், ஆலால சுந்தரராகிய சுந்தர மூர்த்தி நாய னாரும் திருவவதாரம் செய்தருளும் வண்ணம் இருப்பது ஆகு மானால் இந்தப் பெரிய உலகத்தில் சிறந்து விளங்கும் திரு மூனைப்பாடி ந்ாட்டினுடைய பெருமையினுடைய வகை களைப் பாடும் கீர்த்தியைப் பெற்ற பெருமை அடியேங்களு டைய அளவுக்குள் அடங்குவதோ?’ பாடல் வருமாறு:

மறம்தருதி நெறிமாற மணிகண்டர் வாய்மைசெறி அறம்தருகா வுக்கரசும் ஆலால சுந்தரரும் பிறந்தருள உளதானால் கம்மளவோ பேருலகில் சிறந்ததிரு முனைப்பாடித் திறம்பாடும் சீர்ப்பாடு." மறம்-பாவத்தை. தரு-உண்டாக்கும். தீநெறி-கெட்ட வழி. மாற-மாறுமாறு. மணி-நீலமணியைப் போல. கண்டர். ஆலகால விடத்தை விழுங்கியமையால் நீலமாக விளங்கும் திருக்கழுத்தைப் பெற்றவராகிய நடராஜப் பெருமானாருக்கு உரிய வாய்மை-உண்மையான நிலையைப் பெற்ற; ஆகு பெயர். ந றி - சைவ «F t I) il] வ ழி ைய ம் . அறம்-தருமங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். தருவழங்கியருளும். நாவுக்கரசும்-திருநாவுக்கரசு நாயனாரும். ஆலால் சுந்தரரும்-ஆலால சுந்தரராகிய, சுந்தர மூர்த்தி நாயனாரும். பீறத்திருள-திருவவதாரம் செய்தருள, உளது. வண்ணம் இகுத் து விளங்குவது; இடைக்குறை. ஆனால்ஆகுமானால், பேருலகில்-இந்தப் பெரிய உலகத்தில் சிறந்தசிறப்போடு அமைந்த. திருமுனைப்பாடி-திருமுனைப்பாடி நாட்டினுடைய. க்:சந்தி. திறம்-பெருமையினுடைய வகை களை ஒருமை பன்மை மயக்கம். பாடும் சீர்-பாடியருளும் சீர்த்தியைப் பேற்ற ப்:சந்தி. பாடு-பெருமை, நம்-அடியேங், களுடைய இது சேக்கிழார் தம்மையும் பிற தொண்டர்களை யும் சேர்த்துக் கூறியது. அளவோ-அறிவினுடைய அளவுக்குள்

- る。

அடங்கேைத அடக்காது என்பது கருத்து.