பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 24h

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும் என்னாவி காப்பதற் கிச்சையுண் டேவிரும் கூற்றலை . மின்னாரும் மூவிலைச் சூலம்என் மேற்பொறி மேவு கொண்டல் துன்னார்கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே.' என்று ஒரு பாசுரத்தைப் பாடியருளி புள்ளார். இதைப் பாடியருளி தம்முடைய தோளின் மேல் குலக் குறியையும் இடபக்குறியையும் பொறித்தருளப் பெற்ற தலம் இது.

பிறகு வரும் 149-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

மேகங்கள் தங்கியிருக்கும் மாடங்களில் வாழும் வேதி யர்கள் இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர் வன வேதம் என்னும் நான்கு வேதங்களைக் கானம் செய்யும் இனிய நாதத்தை வளருமாறு புரியும் சீர்த்தியைப் பெற்ற வேதியர்கள் தங்களுடைய வாழ்க்கையை நடத்தும் செழிப்பைப் பெற்று விளங்கும் பெண்ணாகடமாகிய அந்தச் சிவத்தலத்திற்குள் அடைந்து நீண்ட சடாபாரத்தைத் தம் முடைய தலையின் மேற் பெற்றவராகிய சுடர்க்கொழுந் தீசர் நிலை பெற்று எழுந்தருளியிருக்கும் திருத்துங்கானை மாடம் என்னும் சிவத்தலத்தை இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள் புகழ்ந்து வணங்கும் அழகிய முனிவராகிய திருநாவுக்கரசு நாயனார் அந்தச் சுடர்க் கொழுந்திசர்ை வணங்கித் தோத்திரங்களைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்து வர்த்தியருளினார்.' பாடல் வருமாறு:

கார்வளரும் மாடங்கள் . .

கலந்தமறை ஒலிவளர்க்கும் சீருடைஅக் தணர்வாழும் . . - செழும்பதியின் அகத்தெய்தி