பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பெரிய புராண விளக்கம்-.ே

வார்சடையார் மன்னுதிருத்

தூங்கானை மாடத்தைப் பார்பரவும் திருமுனிவர்

பணிந்தேத்திப் பரவினார். ’’

கார்-மேகங்கள், ஒருமை பன்மை மயக்கம். வளரும்தங்கியிருக்கும். மாடங்கள்-மாடங்களில். கலந்த-வாழ்ந்

துள்ள. மறை-வேதியர்கள் இருக்கு வேதம், யஜுர் வேதம், காம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங் களைக் கானம் செய்யும்; ஒருமை பன்மை மயக்கம். ஒலிஇனிய நாதத்தை. வளர்சகும்.மேலும் மேலும் வளருமாறு: புரியும். சீர்-சீர்த்தியை. உடை-பெற்ற அந்தணர்-வேதியர் கள்; ஒருமை பன்மை மயக்கம். வாழும்-தங்களுடைய வாழ்க் கையை நடத்தும். செழும்-செல்வச் செழிப்பையும், நீர்வளச் செழிப்பையும், நில வளச்செழிப்பையும். நன் மக்கள் வளச்

செழிப்பையும் வேறு செழிப்புக் களையும் பெற்று விளங்கும். . பதியின்-பெண்ணாகடமாகிய அந்தச் சிவத்தலத்திற்கு. அகத்து-உள்ளே. எய்தி-எழுந்தருளி அடைந்து. வார்-நீள

மாகிய, சடையார்-சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவராகிய சுடர்க்கொழுந்தீசர். மன்னு-நிலை பெற்று எழுந்தருளியிருக்கும். திரு-அழகிய செல்வர்கள் வாழும் எனலும் ஆம். த்:சந்தி. துரங்கானை மாடத்தை

திருத்துங்கானை மாடம் என்னும் சிவத் தலத்தை. ம்:சந்தி. பார்-இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள்;

இடஆகு பெயர். பரவும்-வாழ்த்தி வணங்கும். திரு-அழகிய. முனிவர்-முனிவராகிய திருநாவுக்கரசு நாயனார். பணிந்துசுடர்க் கொழுந்தீசரை வணங்கி, ஏத்தி-தோத்திரங்களைத்

திருவாய் மலர்ந்தருளிச் செய்து. ப்:சந்தி. பரவினார்வாழ்த்தி யருளினார். ‘. . . . . ; . -

பிறகு உள்ள 150-ஆம் கவியின் கருத்து வருமாறு: