பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 243.

புன்மையாகிய வழியாகும் சமண சமயத்தினுடைய கட்டைப் பெற்று வந்த இந்த உடம்போடு உயிர் பிழைத்து வாழ்ந்திருக்க அடியேன் சகிக்க மாட்டேன்; அடியேனுடைய உடம்பின் மேல் தாங்குவதற்கு அடியேனுடைய தலைவ. ராகிய சுடர்க்கொழுந்தீசரே, நின்னுடைய அடையாளப் பொறிகளாகிய சூலத்தையும் இடபத்தையும் பொறித்தருள் வாயாக" எனத்திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டுப்பாடி யருளும் சொற்சுவை, பொருட்சுவை என்னும் சுவைகள் என்னும் செழுமையைப் பெற்ற செந்தமிழ் மாலையாகிய ஒரு திருப்பதிகத்தை அந்தச் சுடர்க்கொழுந்தீசருடைய சந்நிதியில் நின்று கொண்டு அந்த நாயனார் பாடியருள்பவ. ரானார். பாடல் வருமாறு: -

  • புன்னெறியாம் அமண்சமயத்

தொடக்குண்டு போந்த உடல் தன்னுடனே உயிர்வாழத்

தனியேன்.நான் தரிப்பதனுக் கென்னுடைய நாயக, கின்

இலக்கினை யிட்டருள்' என்று பன்னுசெழுந் தமிழ்மாலை

முன்னின்று பாடுவார். ’’ புன்-புன்மையாகிய நெறியாம்-வழியாகும். அமண் சமய-சமண சமயத்தினுடைய. த்:சந்தி. தொடக்குண்டு. கட்டில் அகப்பட்டு. போந்த பிறகு இந்தத் திருவதிகை வீரட்டானத்திற்கு வந்து. உடல் தன்னுடன்-அடியேனு டைய உடம்போடு. தன்:அசைநிலை. ஏ: அசைநிலை. உயிர்வாழ-உயிர் பிழைத்து வாழ்ந்திருக்க. த்:சந்தி. த்ரி யேன் நான்-அடியேன் சகிக்க மாட்டேன். தரிப்பதனுக்குஅடியேனுடைய தோள்களில் தாங்குவதற்கு என்னுடையஅடியேனுடைய நாயக்-தலைவனாகிய சுடர்க்கொழுந் திசனே. நின்-தேவரீருடைய, இலக்கிளை-கலம், இடபம்