பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 245

தன்னாகத் துமைபாகம்

கொண்டானைச் சங்கரனை கன்னாமத்திருவிருத்தம்

நலம்சிறக்கப் பாடுதலும். ’’ இந்தப் பாடல் குளம் 'பொன்னார்ந்த திருவடிக் கென் விண்ணப்பம்’ என்று- பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் என. எடுத்து-தொடங்கி. முன்-எல்லாப் பொருள்களுக்கும் முன்னே தோன்றினவன். ஆகி-ஆக நின்று. எப் பொருட்கும்-எல்லா வகையாகிய பொருள் களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். முடிவு ஆகி-இறுதியில் இறவாமல் இருப்பவன்ாகி. நின்றானை-நிலைத்து நின்ற சுடர்க்கொழுந்தீசனை. த் : ச ந் தி. தன்-தன்னுடைய. ஆகத்து-திருமேனியில். உமை-உமாதேவியை. பா. க ம். வாமபாகத்தில். கொண்டானை-ஏற்றுக் கொண்டவனை. ச்:சந்தி, சங்கரனை-சுகத்தைச் செய்தருளுபவனை. தல்...நல்ல. நாம-அவனுடைய திருநாமங்களை வைத்துப் பாடி யருளிய ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. திருவிருத்தம்திருவிருத்தம் ஒன்றை. நலம்-நன்மைகள்; ஒருமை பன்மை மயக்கம். சிறக்க-சிறந்து விளங்குமாறு. ப்:சந்தி. பாடுதலும்அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளியவுடன்.

இந்தப் பாசுரத்தை மேலே காட்டினோம், ஆண்டுக் கண்டுணர்க. -

அடுத்து வரும் 152-ஆம் பாடலின் கருத்து வருமாறு: நெடுங்காலமாகப் புகழ் பெற்று விளங்கும் அழகிய பெண்ணாகடத்தில் உள்ள திருக்கோயிலாகிய தூங்கானை மாடத்தில் எழுந்தருளியிருக்கின்ற பொன் மலையாகிய மேரு மலை என்னும் வில்லை ஏந்தியவனாகிய சுடர்க் கொழுந் தீசன் வழங்கிய திருவருளினால் ஒரு சிவகணங்களில் ஒன்றாக விளங்கும் ஒரு பூதம் பக்கத்தில் உள்ள ஒருவரும் தெரிந்து கோள்ளாத வண்ணம் வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனா