பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 - பெரிய புராண விளக்கம்-ன்

ருடைய அழகிய தோளில் பெருமையோடு உயர்ச்சியைப். பெற்ற மூன்று இலைகளைக் கொண்ட திரிசூலத்தை, கோபத்தைக் கொண்ட இடபத்தினோடு பொறிக்க. பாடல்

வருமாறு: -

நீடுதிருத் தூங்கானை மாடத்து

நிலவு கின்ற ஆடகமே ருச்சிலையான்

அருளாலோர் சிவபூதம் மாடொருவர் அறியாமே

வாகீசர் திருத்தோளில் சேடுயர்மூ விலைச்சூலம்

சினவிடை யினுடன்சாத்த.”

இந்தப் பாடலும் குளகம். நீடு-நெடுங்காலமாகப் புகழ் பெற்று விளங்கும். திரு-அழகிய செல்வர்கள் வாழும். எனலும் ஆம்; திணை மயக்கம். த்:சந்தி. தூங்கானை மாடத்து-திருப்பெண்ணாகடத்தில் உள்ள திருக்கோயிலாகிய தூங்கானைமாடத்தில். நிலவுகின்ற-எழுந்தருளியிருக்கின்ற, ஆடக-பொன்னால் ஆகிய. மேரு-மேருமலையாகிய, ச்:சந்தி. சிலையான்-வில்லை ஏந்தியவனாகிய சுடர்க் கொழுந்தீசன் வழங்கிய அருளால்-திருவருளினால். ஓர்-ஒரு. சிவபூதம்சிவகணங்களில் ஒன்றாக விளங்கும் பூதம். மாடு-பக்கத்தில்: உள்ள. ஒருவர்-ஒருவரும். அறியாமே-தெரிந்து கொள்ளாத வண்ணம். வாகீசர்-வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனா ருடைய. திரு-அழகிய த்:சந்தி, தோளில், தோளினில், சேடு-பெருமையோடு. உயர்-உயர் ச்சி ைய ப் பெற்ற. மூஇலை-மூன்று இலைகளைக் கொண்ட, இலை: ஒருமை. பன்மை மயக்கம். ச்சந்தி. குலம்-திரிகுலத்தை. சினகோபத்தைக் கொண்ட விடையினுடன்-இடபத்தினோடு. - சாத்த-பொறித் து வைக்க, - བན་་ ་

அடுத்து உள்ள 133-ஆம் கவியின் கருத்து வருமாறு: