பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 247

'அவ்வாறு அந்தத் திருநாவுக்கரசருடைய அழகிய தோளில் அமைந்த அழகிய அடையாளப் பொறியைத் தாம் பார்த்து தம்முடைய திருவுள்ளத்தில் மகிழ்ச்சியை அடைந்து தம்முடைய தலைவனாகிய சுடர்க் கொழுந்தீசன் வழங்கிய திருவருளை எண் ணி மலையிலிருந்து விழும் அருவியைப் போலத் தம்முடைய கண்கள் நீரைச் சொரிய அந்தச் சிவக் கொழுந்தீசரை வணங்கிவிட்டு தரையில் விழுந்து பேராவ லோடு ஒங்கி நின்ற திருவுள்ளத்தைக் கொண்டவராகி, "அடியேன் உஜ்ஜீவனத்தைப் பெற்று அடியேனுடைய துன்பத்திலிருந்து விலகி விட்டேன்’ என்று திருவாய் மலர்ந் தருளிச் செய்துவிட்டு அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தரை யிலிருந்து எழுந்து நின்று கொண்டிருந்தார். பாடல் வருமாறு:

ஆங்கவர்தம் திருத்தோளில்

ஆர்ந்ததிரு இலச்சினையைத் தாம்கண்டு மனம்களித்துத்

தம்பெருமான் அருள்நினைந்து தூங்கருவி கண்பொழியத்

தொழுதுவிழுந் தார்வத்தால் ஓங்கியசிங் தையராகி

உய்ந்தொழிந்தேன்' எனஎழுந்தார்." ஆங்கு-அவ்வாறு. அவர்தம்-அந்தத் திருநாவுக்கரசு நாயனாருடைய. தம்:அசைநிலை. திரு-அழகிய த்:சந்தி. தோளில்-தோளின்மேல். ஆர்ந்த-அமைந்த. திரு-அழகிய, இலச்சினையை-அடையாளப் பொறியை. த்:சந்தி. தாம் கண்டு-தாம் பார்த்து. தாம் என்றது திருநாவுக்கரசு நாயனாரை. மனம்-தம்முடைய திருவுள்ளத்தில், களித்துமகிழ்ச்சியை அடைந்து. த் : ச ந் தி. தம்-தம்முடைய. பெருமான்-தலைவனாகிய சுடர்க் கொழுந்தீசன். அருள். வழங்கிய திருவருளை. நினைந்து-எண்ணி, தூங்கு-மலை யிலிருந்து குதிக்கும். அருவி-அருவியைப் போல. கண்-தம்