பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 பெரிய புராண விளக்கம்-5

முடைய கண்கள்: ஒருமை பன்மை மயக்கம். பொழிய. நீரைச் சொரிய. த்:சந்தி. தொழுது-அந்தச் சு டர் க் கொழுந்தீசரை வணங்கிவிட்டு. விழுந்து-தரையில் விழுந்து எழுந்து நின்று கொண்டு. ஆர்வத்தால்-பேராவலோடு: உருபு மயக்கம். ஓங்கிய-பக்தி ஓங்கி நின்ற. சிந்தையராகி. திருவுள்ளத்தைப் பெற்றவராகி. உய்ந்து-அடியேன் உஜ்ஜீ 'வனத்தை அடைந்து. ஒழிந்தேன்-துன்பங்களிலிருந்து விலகி விட்டேன். என-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு, இடைக்குறை. எழுந்தார்-எழுந்து நின்று கொண் டிருந்தார். x - .

பிறகு உள்ள 154-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: - அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருப்பெண்ணா கடத்தில் விளங்கு ம் திருக்கோயிலாகிய தூங்கானை மாடத்தில் எழுந்தருளியிருக்கும் சுடர்க் கொழுந்தீசருடைய திருவடிகளை வாழ்த்தி வணங்கிவிட்டு அந்தப் பக்கங்களில் அமையுமாறு திருத்தொண்டுகளைப் புரிந்து பழகி அந்தச் சிவத்தலத்தில் தங்கியிருக்கும் காலத்தில் மலர்கள் மலர்ந்த பல வகை மரங்கள் வளர்ந்து நிற்கும் காட்டில் அந்த மலர்கள் நறுமணம் கமழும் ஒப்பு அற்ற திருவரத் துறையையும் தேன் நிரம்பிய மலர்கள் மலர்ந்த மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம் பொழிலில் மேகங்கள் வந்து துயிலும் திருமுதுகுன்றத்திற்கும் அந்த நாயனார் எழுந்தருளி அந்தத் திருமுதுகுன்றத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் பழமலை நாதரை வணங்கிவிட்டு. பாடல் வருமாறு:

" தூங்கானை மாடத்துச்

சுடர்கொழுந் தின்அடிபரவிப் பாங்காகத் திருத்தொண்டு செய்துபயின் றமரும்நாள் பூங்கானம் மனம்கமழும்

பொருவில்திரு அரத்துறையும்