பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 249"

தேங்காவின் முகில்உறங்கும்

திருமுதுகுன் றமும்பணிந்து.'

இந்தப் பாடல் குளகம். தூங்கானை மாடத்து-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருப் பெண்ணாகடத்தில் விளங் கும் திருக்கோயிலாகிய திருத்துங்கானை மாடத்தில் எழுந் தருளியிருக்கும். ச்:சந்தி. சுடர்க் கொழுந்தின்-சுடர்க் கொழுந்தீசருடைய. அடி-திருவடிகளை; ஒருமை பன்மை மயக்கம். பரவி-வாழ்த்தி வணங்கிவிட்டு. ப்:சந்தி. பாங்கு ஆக-பக்கங்களில் அமையுமாறு. பாங்கு: ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. திருத்தொண்டு-தமக்கு உரிய திருத் தொண்டுகளை; ஒருமை பன்மை மயக்கம். செய்து-புரிந்: தருளி. பயின்று-பழகி. அமரும்-அந்தச் சிவத்தலத்தில் தங்கியிருக்கும். நாள்-காலத்தில். பூம்-மலர்கள் மலர்ந் திருக்கும் பலவகையாகிய மரங்கள் வளர்ந்து நிற்கும். அந்த மரங்களாவன: தேக்க மரம், வேங்கை மரம், வாகை மரம், தென்ன மரம், பன மரம், மகிழ மரம், தமால மரம், வேப்ப மரம், ஆல மரம், அரச மரம், வாத நாராயண மரம், பூவரச மரம், கடம்ப மரம், வில்வ மரம், விளா மரம், மருத மரம், பல வகையாகிய வாழை மரங்கள், நுணா மரம் முதலி யவை. கானம்-காட்டில். மனம்-அந்த மலர்கள் நறு மனத்தை. கமழும்-வீசும். அந்த மலர்களாவன: மல்லிகை மலர். முல்லை மலர், இருவாட்சி மலர். நந்தியா வட்டை மலர், பவள மல்லிகை மலர், பூவரச மலர், வேப்ப மலர் முதலியவை. பொரு-ஒப்பு. இல்-இல்லாத கடைக்குறை. திரு வரத்துறையும்-திருநெல்வாயிலரத்துறைக்கும் அந்த நாயனார் எழுந்தருளி. தேம்-தேன் நிரம்பிய. காவின். மலர்கள் மலர்ந்திருக்கும் மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம் பொழிலில். முகில்-மேகங்கள்; ஒருமை பன்மை மயக்கம். உறங்கும்-வந்து துயிலும். திரு முதுகுன்றமும்-திருமுது குன்றத்திற்கும். அந்த நாயனார் எழுத்தருளி அந்தச் சிவத்