பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பெரிய புராண விளக்கம்-.ே

"திருநாவுக்கரசு நாயனாரும் திருமால், பிரம தேவர் ஆகிய இரண்டு தேவர்களும் திருவடிகளைப்பன்றிஉருவத்தை எடுத்து நிலத்தைத் தோண்டிப் பார்த்தும், அன்னப் பறவையினுடைய வடிவத்தை எ டு த் து க் கொ ண் டு மேலே பறந்து திரு முடியைத் தேடியும் அவற்றைக் காண முடியாதவராகிய நடராஜப் பெருமானார் திரு நடனம். புரிந்தருளிய அந்தச் சிதம்பரத்தினுடைய அழகிய எல்லை யிடத்தில் எழுந்தருளித் தரையில் படியுமாறு தம்முடைய திரு மேனியினால் விழுந்து அந்த நடராஜப் பெருமானாரை வணங்கிய பிறகு மேலும் மேலும் எழுந்து ஓங்கும் வேகத். தோடும் பூம்பொழிலில் மகிழ்ச்சியைப் பெற்ற மயில்கள் களிப்பை அடைந்து எதிரில் எதிரில் நடனமாட நறுமணம் கமழும் செந்தாமரை மலர்களும் வெண்டாமரை மலர் களும் சுற்றி மலர்ந்திருக்கும் வாவிகளும். தடாகங்களும், மலருகின்ற திருமுகம் விளக்கத்தை அடைந்த மருத திலத்தில் உள்ள குளிர்ச்சியைப் பெற்ற வயல்களின் வழியாகவே அந்த நாயனார் எழுந்தருளினார். பாடல் வருமாறு: - - -

" நாவுக் கரசரும் இருவர்க் கரியவர்

foLIDIT டியதிரு எல்லைப் பால் மேவித் தலமுற மெய்யில் தொழுதபின்

மேன்மேல் எழுதரும் விரை வோடும் - காவிற் களிமயில் மகிழ்வுற் றெதிரெதிர்

ஆடக் கடிகமழ் கமலம் சூழ் . . . வாவித் தடமலர்வதனம் பொலிவுறு

மருதத் தண்பனை வழி வந்தார்." நாவுக்கரசரும்-திருநாவுக்கரசு நாயனாரும். இருவர்க்கு அரியவர்-திருமால் பிரமதேவர் ஆகிய இரண்டு தேவர்களும் திருவடிகளைப் பன்றி உருவத்தை எடுத்துக் கொண்டு நிலத்தைத் தோண்டிப் பார்த்துத் தேடியும், அன்னப் பறவை. வின் வடிவத்தை எடுத்துக் கொண்டு திருதுடினம் மேலே