பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 255.

மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம்பொழிலைப் பெற்ற அழகிய பெரும்பற்றப் புலியூராகிய சிதம்பரத்தினுடைய பக்கத்தை அந்த நாயனார் அடைந்தார். பாடல் வருமாறு:

" ஆனாத சீர்த்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற

வானாறு புடைபரக்கும் மலர்ச்சடையார் அடிவணங்கி ஊனாலும் உயிராலும் உள்ளபயன் கொளநினைந்து தேனாரும் மலர்ச்சோலைத் திருப்புலியூர் மருங்க

ணைந்தார்.” ஆனாத-சிறிதேனும் என்றும் குறையாத, இர்-ர்ேத்தி யைப் பெற்ற த்:சந்தி. தில்லை-தில்லையாகிய சிதம்பரத் தில் உள்ள ஆலயத்தில் விளங்கும். அம்பலத்து-திருச்சிற்றம் பலத்தில், ஏ:அசைநிலை. ஆடுகின்ற-திருநடனம் புரிந்தருளு கின்ற. வானாறு-ஆகாய கங்காநதி. புடை-பக்கத்தில். பரக்கும்-பரவித் தங்கியிருக்கும். மலர்-கொன்றை மலர்களை அணிந்திருக்கும். ஒருமை பன்மை மயக்கம். ச்:சந்தி. சடை - யார்-சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவ ராகிய அந்த நடராஜப் பெருமானாருடைய. அடி-திருவடி களை ஒருமை பன்மை மயக்கம். வனங்கி-அந்தத் திரு' நாவுக்கரசு நாயனார் பணிந்து. ஊனாலும்-தம்முடைய திருமேனியினாலும். உயிராலும்-தம்முடைய இனிய உயிரி னாலும், உள் ள -இ ரு க் கி ற. பயன்-பிரயோசனத்தை. கொள-பெறுவதற்கு இடைக்குறை. நினைந்து-எண்ணி, தேன்.ஆரும்-தேன் நிரம்பியிருக்கும். மலர்-மலர்கள் மலர்ந் துள்ள ஒருமை பன்மை மயக்கம். ச்:சந்தி, சோலை-பணி வகையாகிய மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம்பொழிலைப் கி.பற்ற. த்:சந்தி. திரு-அழகிய செல்வர்கள் வாழும்" எனலும் ஆம் திணை மயக்கம். ப்:சந்தி. புலியூர்-பெரும் பற்றப் புலியூராகிய சிதம்பரத்தினுடைய மரு ங் கும் பக்கத்தை அணைத்தார்.அந்த ந யனர் அடைந்த rf。 பிறகு வரும் 157-ஆம் கவியின் கருத்து வருமாறு: