பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பெரிய புராண விளக்கம்-6.

இந்தத் திருப்பதிகத்தில் வரும் ஒருபாசுரத்தை முன்பே எழுதி யுள்ளோம்; ஆண்டுக் கண்டுணர்க. மருங்கு-அந்தத் திருமுது குன்றத்துக்குப் பக்கத்தில். உள்ள-இருக்கிற. தண்-குளிர்ச், சியைப் பெற்ற துறை-துறைகளில்; ஒருமை பன்மை மயக்கம். நீர்-புனல் ஒடும். ப்:சந்தி. பதிகளிலும்-பல சிவத் தலங்களிலும். தனி. ஒ. ப்ப ற் ற. விடையார்-இடப வாக னத்தை ஒட்டுபவராகிய சிவபெருமானார். மேவி-விரும்பி. இடம் கொண்டருளும்-தாம் எழுந்தருளும் இடமாகக் கொண்டருளும். தானங்கள்-பல சிவத் தலங்களுக்கும் அந்த நாயனார் எழுந்தருளி. கும்பிட்டு-அந்தத் தலங்களில் திருக், கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் களைத் தம்முடைய தலையின்மேல் தம்முடைய திருக்கரங் களை வைத்துக் கூப்பிக் கும்பிட்டுவிட்டுப் பிறகு தரையில் விழுந்து வணங்கிவிட்டு, க்:சந்தி. குணதிசை மேல்-கிழக்குத் திசையின்மேல். புண்டரிக-செந்தாமரை மலர்களும் வெண் டாமரை மலர்களும் மலர்ந்து விளங்கும்; ஒருமை பன்மை. மயக்கம். த்:சந்தி. தடம்-தடாகம். சூழ்ந்த-சுற்றி அமைந்த. நிவா-நிவா நதியினுடைய. க்:சந்தி. கரையே-கரையின் வழியே. போதுவார்-அந்த நாயனார் எழு ந் த ரு ஞ்

வாரானார். - , , - -

அடுத்து வரும் 156-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'அந்தத் திருநாவுக்கரசு நாயனார் என்றும் குறையாத சீரைப் பெற்ற தில்லையாகிய சிதம்பரத்தில் உள்ள ஆலயத் தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளு .கின்ற ஆகாய கங்கா நதி பக்கத்தில் பரவித் தங்கியிருக்கும் கொன்றை மலர்களை அணிந்திருக்கும் சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவராகிய அந்த நடராஜப் பெருமானாருடைய திருவடிகளை அந்த நாயனார் பணிந்து, தம்முடைய திருமேனியாலும், தம்முடைய. இனிய உயிரி னாலும் இருக்கிற பிரயோசனத்தைப் பெறுவதற்கு எண்ணி தேன் நிரம்பியிருக்கும் மலர்கள் மலர்ந்துள்ள பலவகையான