பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கர்சு நாயனார் புராணம் 253.

அடுத்து உள்ள 155-ஆம் பாடலின் கருத்து வருமாறு: சொற்சுவை, பொருட்சுவை என்னும் சுவைகளாகிய வளத்தைப் பெற்ற செந்தமிழ் மொழியில் அமைந்த மென்மையாகிய மலர்மாலையாகிய ஒரு திருப்பதிகத்தை அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பழமலை நாதருக்கு அணிந்தருளி அந்தத் திருமுதுகுன்றத்துக்குப் பக்கத்தில் இருக்கிற குளிர்ச்சியைப் பெற்ற துறைகளில் நீர் ஓடும் பல சிவத்தலங்களிலும் ஒப்பற்ற இடபவாகனத்தை ஒட்டுபவ ராகிய சிவபெருமானார் விரும்பித்தாம் எழுந்தருளும் இட மாகக் கொண்டருளும் பல சிவத்தலங்களுக்கும் அந்த நாய ன்ார் எழுந்தருளி அந்தத் தலங்களில் திருக் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களைத் தம்முடைய, தலையின் மேல் தம்முடைய திருக் கரங்களை வைத்துக் கூப்பிக் கும்பிட்டுப் பிறகு தரையில் விழுந்து வணங்கிவிட்டுக் கிழக்குத் திசையின் மேல் செந்தாமரை மலர்களும் வெண் உாமரை மலர்களும் மலர்ந்து விளங்கும் தடாகம் சுற்றி" கயிருக்கும் நிவா நதியினுடைய கரையின் வழியே அந்த நாய' ன்ார் எழுந்தருளுவாரானார். பாடல் வருமாறு: . . .

வண்டமிழ்மென் மலர்மாலை શ્ર. -

புனைந்தருளி மருங்குள்ள தண்டுறைநீர்ப் பதிகளிலும் - தணிவிடையார் மேவியிடம்

கொண்டருளும் தானங்கள்

கும்பிட்டுக் குணதிசைமேல் புண்டரிகத் தடம்சூழ்ந்த

திவாக்கரையே போதுவார். 爵 彰 வண்-சொற்சுவை, பொருட்சுவை என்னும் சுவைக. ளாகிய வளத்தைப் பெற்ற. தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த. மென்-மென்மையாகிய. மலர்மாலை-மலர்மாலை ஆகிய ஒரு திருப்பதிகத்தை புனைந்தருளி. அந்த த் திருந்ாவுக்கரசு நாயனார் பழமலைநாதருக்கு அணிந்தருளி.