பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 பெரிய புராண விளக்கம்-.ே

நாச்சியாரின் பொருட்டுப் பொன்னை வழங்கியருளுமாறு: பழமலை நாதரை வேண்டி வழிபட்ட தலம் இது. இது விருத்தகாசி எனவும் வழங்கும். இந்தத் தலத்தில் உயிர் விடும் பிராணிகளுக் கெல்லாம் பெரிய நாயகியார் தம் முடைய ஆடையினால் விசி இளைப்பாற்றப் பழமலை நாதர் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்தப் பிராணிகளைத் தம்முடைய உருவமாக ஆக்கும் தலம் இது. ஆதலால் இது காசியைக் காட்டிலும் சிறந்தது என்று ஆன் றோர் கூறுவர். இந்தச் சிறப்பைக் கந்த புராணத்தில் உள்ள வழி நடைப்படலத்தில் உள்ள பின்வரும் பாடலால் உணர்ந்து கொள்ளலாம்.

  • " துரசினால் அம்மை வீசத் -

தொடையின் மேற் கிடத்தித் துஞ்சு மாசிலா உயிர்கட் கெல்லாம்

அஞ்செழுத் தியல்பு கூறி ஈசனே தனது கோலம்

ஈந்திடும் இயல்பால் அந்தக் -- காசியில் விழுமி தான - ;

முதுகுன்ற வரையும் கண்டான். " - இதைப் பற்றிய தேவாரப் பாசுரம் ஒன்றைச் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளியிருக்கிறார். அந்தப் பாசுரம்.

வருமாறு: ": - - -

  • நெடியோன் நான்முகனும்

இரவியொடும் இந்திரனும் . முடியால் வந்திறைஞ்ச

முதுகுன்றம் அமர்த்தவே படியா ரும்மியலாள் * *

பரவைஇவள் தன்முகப்பே அடிகேள் தந்தருளாப்

அடியேன்.இட் டனம்கேட்வே. **.