பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 பெரிய புராண விளக்கம்-6.

களுக்குப் பக்கத்தில் நெருங்கியுள்ள காடு என்று கூறு மாறு மிகுதியாக உயர்ந்து வளர்ந்திருக்கும் மூங்கில் களுடைய அளவைப் போலப் பெருகி வளரும் கரும்புச் செடிகள் பெருகி வளர்ந்து பக்கத்தில் முதிர்ச்சியை அடைந்த முத்துக்களைச் சங்குப் பூச்சிகள் பொழிபவை பெரியவராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனாருடைய அழகிய திருவுரு. வத்தைப் பார்த்து உருக்கத்தை அடைந்து அன்பைப் பெற்ற நீரைக் கண்கள் சொரிபவை என்று கூறுமாறு முன்னால் இருக்கின்ற வளப்பத்தைப் பெற்ற வயல்கள் உள்ள எல்லா இடங்களும் அவ்வாறு விளங்கும். பாடல் வருமாறு:

முருகிற் செறிஇதழ் முளரிப் படுகரில்

முதுமே திகள் புது மலர்மேயும் அருகிற் செறிவன மெனமிக் குயர்கழை

அளவிற் பெருகிட வளர்இக்குப் பெருகிப் புடைமுதிர் தரளம் சொரிவன பெரியோ ரவர்திரு வடிவைக்கண் டுருகிப் பரிவுறு புனல்கண் பொழிவன எண்முன் புளவள வய லெங்கும்.' இந்தப் பாடல் குளகம். முருகில்-நறுமணத்தோடு: உருபு மயக்கம். செறி-நெருங்கிய இதழ்-இதழ்கள் விரிந்திருக் கும்; ஒருமை பன்மை மயக்கம். முளரி-செந்தாமரை மலர்க. ளும் வெண்டாமரை மலர்களும் மலர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. படுகரில்-தடாகங்களில்; ஒருமை. பன்மை மயக்கம். முது-முதிய கிழப்பருவத்தை அடைந்த. மேதிகள்-எருமை மாடுகள், புது-புதியவையாக மலர்ந்திருக் கும். மலர்-செந்தாமரை மலர்களையும், வெண்டாமரை மலர்களையும், செங்கழுநீர் மலர்களையும், நீலோற்பல மலர்களையும், குமுத மலர்களையும், அல்லி மலர் களையும், ஆம்பல் மி ல ர் க ைள պ ա வேறு மலர் களையும்; ஒருமை பன்மை மயக்கம். மேயும்-மேய்ந்து, தின்னும். அருகில்-அந்தத் தடாகங்களுக்கு பக்கத்தில்.