பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 25g.

செறி.நெருங்கியுள்ள. வனம்-மரங்கள் வளர்ந்து நிற்கும். காடு. என-என்று கூறுமாறு; இடைக்குறை. மிக்குமிகுதியாக அமைந்து. உயர் - உயரமாக வணர்ந்திருக்: கும். கழை-மூங்கில்களினுடைய. அளவில்-அளவைப் போல, பெருகிட-பெருகி வளர. வளர்-வளர்ந்து நிற்கும். இக்கு - கரும்புச் செடிகள்: ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பெருகி-பெருகி வளர்ந்து. ப்:சந்தி, புடை-அவற்: றின் பக்கத்தில். முதிர்-முதிர்ச்சியை அடைந்த தரளம்முத்துக்களை ஒருமை பன்மை மயக்கம். சொரிவன-சங்குப் பூச்சிகள் உமிழ்பவை. பெரியோர்-பெருமையைப் பெற்றவ ராகிய, அவர்-அந்தத் திருநாவுக்கரசு நாயனாருடைய. திரு. அழகிய, வடிவை-திருவுருவத்தை. க்:சந்தி. கண்டு-பார்த்து. உருகி-உருக்கத்தை அடைந்து. ப்:சந்தி. பரிவுறு-அன்பைப் பெற்ற: கழிவிரக்கத்தைப் பெற்ற' எனலும் ஆம். புனல். நீரை. கண்-கண்கள்: ஒருமை பன்மை மயக்கம். பொழிவனசொரிபவை. என-என்று சொல்லுமாறு; இடைக்குறை. முன்பு-முன்னால். உள-இருக்கின்ற; இடைக்குறை. வள

வளப்பத்தைப் பெற்ற என்றது சம்பா நெற் பயிர்கள், !

குறுவை நெற் பயிர்கள். மணக்கத்தை நெற்பயிர்கள்

که

முதலியவற்றை. வயல்-வயல்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

எங்கும்-சிதம்பரத்தில் எல்லா இடங்களும்; ஒருமை

பன்மை மயக்கம். அவ்வாறு விளங்கும் என்பதை கூட்டிப்

பொருளை முடிக்க.

கரும்புச் செடி மூங்கிலைப் போலத் தோன்றுதல்: கரும்

பின் கண்ணிடை அன்ன பைதல் ஒரு கழை நீடிய சுரன்.”

(குறுந்தொகை 180: 3-4) என்று கச்சிப்பேட்டு நன்னாகை யார் பாடியதைக் காண்க, -

பிறகு உள்ள 159-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: .

அறிவினால் பெருமையைப் பெற்றவராகிய திருநாவுக் கரசு நாயனார் பக்கத்தில் உள்ள நெற்பயிர்கள் வளர்ந்து.