பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£260 பெரிய புராண விளக்கம்-6

நிற்கும் பண்ணைகளில் உள்ள வயல்களாகிய அவற்றினு: டைய மணம் தம்முடைய நாசியில் படுமாறு எழுந்தருளுபவ. ராகிய அந்த நாயனார், இந்த மானிடப் பிறவியாகிய பகையினுடைய வழியை விட்டு விடுபவர்களே, புண்ணியம் பாவம் என்னும் இரண்டு வினைகள் பெருகியிருப்பதனால் தொடர்ந்து வருகின்ற நோய்களும், உண்டாகும் பாச பந்த மும் அகன்று போகும் வண்ணம் வந்து சேருங்கள்." என இரண்டு பக்கங்களிலும் பழகிச் சுற்றியிருக்கும் மரங்களினு: டைய கிளைகளின் மேல் அமர்ந்திருந்து குயில்கள் இனிமை - யாகக் கூவும் நெருங்கிய இடத்தில் பல மரங்கள் நிலை பெற்று நிற்பதனால் தோற்றப் பொலிவைப் பெற்ற அழகிய நந்தனவனத்தை அந்த நாயனார் தமக்கு எதிரில் பார்த் தார். பாடல் வருமாறு: -

" அறிவிற் பெரியவர் அயல்கெற் பணைவயல்

அவையிற் படும்வகை அணைகின்றார் பிறவிப் பகைநெறி விடுவீர்.இருவினை

பெருகித் தொடர்பிணி உறுபாசம் பறிவுற்றிட அணை யுமின்"என் றிருபுடை

பயில்சூழ் சினைமிசை குயில்கூவும் செறிவிற் பலதரு நிலையிற் பொலிவுறு

திருகந் தனவனம் எதிர்கண்டார்.’’ அறிவில்-தம்மிடம் வாய்த்திருக்கும் நல்ல அறிவினால்: உருபு மயக்கம். பெரியவர்-பெருமையைப் பெற்றவராகிய திருநாவுக்கரசு நாயனார். அயல்-திருப்பாதிரிப் புலியூரின் பக்கத்தில். நெல்-சம்பா நெற் பயிர்களும், குறுவை நெற் பயிர்களும், மணக்கத்தை நெற் பயிர்களும், வேறு வகையான நெற் பயிர்களும் வளர்ந்து நிற்கும் ஆகுபெயர்: ஒருமை பன்மை மயக்கம். பணை-பண்ணைகளில் உள்ள இடைக் குறை: ஒருமை பன்மை மயக்கம். வயல்-வயல்களாகிய: ஒருமை பன்மை மயக்கம். அவையில்-அவற்றினுடைய நறு