பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார். புராணம் 261.

ஆமணம். படும் வகை-தம்முடைய நாசியில் படுமாறு. அணை கின்றார்-சிதம்பரத்திற்கு எழுந்தருளுபவராகிய அந்த நாய னார். பிறவி-இந்த மானிடப் பிறவியாகிய, ப்:சந்தி. பகைவகையினுடைய. நெறி-வழியை. விடுவீர்-விட்டு விடுவதற்கு விரும்புகின்ற மக்களே, ஒருமை பன்மை மயக்கம்; விளி. இரு வினை-புண்ணியம், பாவம் என்னும் இரண்டு செயல்கள் : ஒருமை பன்மை, மயக்கம். பெருகி-பெருகியிருப்பதனால். த்:சந்தி. தொடர்-தொடர்ந்து வருகின்ற. பிணி-சுரம், தலை வலி, வயிற்று வலி, முடக்கு வாதம், காசநோய், இருமல், வயிற்றுக்கடுப்பு முதலிய நோய்களும்; ஒருமை பன்மை மயக் கம். உறு-உண்டாகும். பாசம்-பாச பந்தமும், பறிவுற்றிடஉங்களை விட்டு அகன்று போகும் வண்ணம். அணையுமின்இந்தச் சிதம்பரத்திற்கு வந்து சேருங்கள். என்று-எண். இரு புடை-இரண்டு பக்கங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். பயில்-பழகி. சூழ்-சுற்றியிருக்கும். சினை மிசை-மரங்களி னுடைய கிளைகளின் மேல் அமர்ந்திருந்து. சினை: ஒருமை 'பன்மை மயக்கம். குயில்-குயில்கள்: ஒருமை பன்மை மயக்கம். கூவும்-இனிமையாகக் கூவும். அந்தக் குயில்கள் மாமரத்தில் அமர்ந்திருக்கும். செறிவில்-நெருங்கிய இடத்தில், மரங்கள் நெருங்கி வளர்ந்து நிற்கும் இடத்தில். பல-பல வகையான. தரு-மரங்கள். நிலையில்-நிலை பெற்று நிற்பதனால் உருபு மயக்கம். பொலிவுறுதோற்றப் பொலிவைப் பெற்ற திருஅழகிய நந்தனவனம்-சிதம்பரம் ஆலயத்தைச் சார்ந்த நந்தனவனத்தை. எதிர்-தமக்கு எதிரில். கண்டார்-அந்த நாயனார் பார்த்தார். - -

பிறகு உள்ள 150-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: *அந்தத் திருநாவுக்கரசு நாயனார் முன்னால் பணி வோடு நடராஜப் பெருமானாரை வணங்கி விட்டு அந்தச் சிதம்பரத்திற்கு எழுந்தருளிச் சேர அழகிய மரக் கிளைகளின் மேலும், பக்கங்களில் உள்ள எல்லா இடங்களிலும் தவத்தை

தி-17 - -