பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 . பெரிய புராண விளக்கம்-இ.

நாவுக்கரசு நாயனார் எழுந்தருளி அந்த ஈசுவரரை வணங்கி: விட்டு, வனபவளவாய் திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாள்' என்று தொடங்கி அத்தகைய திருப்பதிகத். தோடு பக்தியை உண்டாக்கும் சொற்சுவை, பொருட்சுவை என்னும் வளப்பத்தையுடைய செந்தமிழ் மொழியில் அமைந்த திருப்பதிகத்தையும் அந்த நாயனார் பாடியருளி அந்தத் திருக்கழிப்பாலையில் தங்கியிருந்து யாரும் நினைப் பதற்கு அரியவராகிய அந்தப் பால்வண்ணநாதேசுவரரை வாழ்த்தி வணங்கிவிட்டு நெடுங்காலமாகப் புகழ் பெற்று. விளங்கும் அழகிய பெரும்பற்றப்புலியூராகிய சிதம்பரத்தை. எண்ணி மீண்டும் அங்கே எழுந்தருள்பவரானார். பாடல் வருமாறு: -

" சினவிடையே றுகைத்தேறும் மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து 'வனபவளவாய்திறந்து வானவர்க்கும்

தானவனே என்கின் றாள்' என் றனையதிருப் பதிகமுடன் அன்புறுவண்

டமிழ்பாடி அங்கு வைகி நினைவரியார் தமைப்போற்றி கீடுதிருப்

புலியூரை கினைந்து மீள்வார். ’’ சின-கோபத்தைக் கொண்ட விடை-இடபமாகிய. ஏறு-காளைமாட்டு வாகனத்தை. உகைத்து-ஒட்டி, ஏறும்அதன்மேல் ஏறி எழுந்தருளும். மணவாள நம்பி-மண வாள நம்பியாகிய பால்வண்ணநாதேசுவரருடைய. கழல்வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளை ஆகுபெயர். சென்று-திருக்கழிப்பாலைக்கு அந்தத் திருநாவுக்கரசு நாய னார் எழுந்தருளி. தாழ்ந்து-அந்த ஈசுவரரைத் தரையில் விழுந்து வணங்கிப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று. கொண்டு. வனபவள வாய் திறந்து வானவர்க்கும். தான வனே என்கின்றாள்' என்று. வனபவள வாய் திறந்து வான, வர்க்கும் தானவனே என்கின்றாளால் எனத் தொடங்கி.